என் மலர்


வேதா
எக்ஸ் கமேண்டோ தீண்டாமை கொடுமையில் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் கதை
கதைக்களம்
ஜான் ஆபிரகாம் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். அவருக்கு ஒருவரை உயிரோடு பிடிக்க மிஷன் கொடுக்கப்படுகிறது ஆனால் அவர் அந்த மிஷனில் தோல்வியடைகிறார். இதனால் இவரின் பதிவி பரிபோகிறது ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். இவரின் மனைவி தமன்னாவின் ஊருக்கு வருகிறார். அங்கு ஒரு கல்லூரியில் பணி புரிகிறார். அந்த ஊரில் மிகப்பெரிய தீண்டாமை பழக்கத்தில் உள்ளது. பட்டியலின மக்களை அடிமைப் போல் நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் கட்டமைப்பிற்குள் வைத்து இருக்கிறார் பஞ்சாயத்து தலைவனான அபிஷேக் பேனர்ஜீ. அந்த கிராமத்தில் ஒரு பெண் இந்த தீண்டாமையில் இருந்து வெளிவர முயற்சி செய்கிறாள். குத்துச்சண்டை மூலம் இதனை சாதிக்க முயற்சி செய்கிறாள். இதற்கு ஜான் ஆபிரகாம் அவளுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் அபிஷேக் பேனர்ஜினால் அவர்கள் அந்த கிராமத்தில் இருக்க இயலாது சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த கிராமத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கின்றனர்.
நடிகர்கள்
ஜான் ஆபிரகாம் ஆக்ஷன் மற்றும் எமோஷனலாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷர்வரி அவரது பங்கை நன்றாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் மிகவும் மெனெக்கட்டு நடித்துள்ளார். பஞ்சாயத்து தலைவனாக நடித்திருக்கும் அபிஷேக் பானர்ஜி வில்லத்தனமாக மிரட்டியுள்ளார்.
இயக்கம்
சாதியத்தையும் அடக்குமுறையும் மையமாக வைத்து கதைக்களத்தை இயக்கியுள்ளார் நிகில் அத்வானி. படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை என்பது படத்தின் மைனஸ். இரண்டாம் பாதி கதை இல்லாமல் வெறும் ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகளாக இருப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
யுவாவின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பட ஓட்டத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
மலே பிரகாஷ் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் மெனெக்கெட்டு எடுத்துள்ளார்
தயாரிப்பு
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வேதா திரைப்படத்தை தயாரித்துள்ளது.










