என் மலர்


உழவர் மகன்
ஓர் எளிமையான காதல் கதையை விவசாயப் பின்னணியில் எடுத்துக் கொண்டு கூறியிருக்கிறார்கள்.
கதைக்களம்
உரக்கடையில் வேலை பார்க்கும் கார்த்திக் விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளவன்.விவசாயத்தைத் தொழிலாக நினைக்காமல் வாழ்க்கை முறையாக நினைக்கிறார்.அஞ்சலி வசதி படைத்த வீட்டுப் பெண் என்றாலும் அவளுக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் இருக்கிறது.
விவசாயம் படித்துக் கற்றுக் கொள்ள வருகிறாள். அவளுக்கு கார்த்திக் விவசாயம் சார்ந்து பயிற்சி அளிக்கிறார். அப்பொழுது இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
இவர்களின் காதல் அஞ்சலியின் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை.அதனால் தங்கையின் காதலைக் கைவிடும்படிக் கார்த்திக்கின் குடும்பத்தினரை மிரட்டுகிறான்.
அவன் திட்டப்படி பெண் பார்க்கப் போகும் போது இந்த சம்பந்தம் ஒத்து வராது என்று கார்த்திக்கும் அவனது அம்மாவும் கூறுகிறார்கள். பிறகு மனமுடைந்த கார்த்திக்கின் அம்மா இறந்து விடுகிறாள்.
தன் தாயை இழந்து விட்ட கார்த்திக் காதலி அஞ்சலி நினைவாகவே இருக்கிறான்.ஆனால் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமான கணவன் அஞ்சலியின் முந்தைய
காதலை அறிந்து கொண்டு தன் மனைவியை மிகவும் சந்தேகப்படுகிறான்.அதனால் அவர்கள் பிரிகிறார்கள்.
மறுபக்கம் கார்த்திக்கை ஜனனி என்ற பெண் காதலித்து வருகிறாள். ஆனால் கார்த்திக் அவளை மறுப்பதா இல்லையா என தவித்துக் கொண்டு இருக்கிறான்.
தான் விரும்பியவளும் கிடைக்காமல் ஒரு கட்டத்தில் சோகத்தில் தவிக்கிறான்.இந்த நேரத்தில் வாழாமல் அஞ்சலியும் வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.ஒரு காலத்தில் கார்த்திக்கை மிரட்டிய அஞ்சலியின் அண்ணன் இப்போது தன் தங்கைக்கு வாழ்வு கொடுக்குமாறு வேண்டுகிறான்.
இந்தக் காதல் கதை ஒருபுறம் இருக்க, நில அபகரிப்பு செய்து விவசாய நிலங்களை எல்லாம் ஏமாற்றி எழுதி வாங்கும் மோசடிக்காரன் அஞ்சலியின் விவசாய நிலத்தையும் எழுதிக் கொடுக்கும்படி மிரட்டுகிறான். இதற்காக அஞ்சலியைக் கடத்திக் கொண்டு செல்கிறான். இதை அறிந்து கொண்ட கார்த்திக் அவளைக் காப்பாற்றினானா? தன்னை விரும்பிய ஜனனியைத் திருமணம் செய்து கொண்டானா? தனது பழைய காதலைப் புதுப்பித்துக் கொண்டானா? நில அபகரிப்பு செய்பவனை என்ன செய்தான்? போன்றவற்றிற்கான பதில்தான் 'உழவர் மகன்' படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள்
படத்தில் கார்த்திக்காக கௌஷிக் நடித்துள்ளார். அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்குக் குறையில்லாமல் செய்துள்ளார் . அஞ்சலியுடன் காதல் கொள்ளும்போதும் தன் அம்மா இறக்கும்போது அழுது கதறும் போதும் விவசாய நில அபகரிப்பு மோசடிக்காரர்களிடம் ஆவேசமாகப் பொங்கும் போதும் குறையில்லாமல் நடித்துள்ளார்.அஞ்சலியாக சிம்ரன் ராஜ் நடித்துள்ளார்.
நல்ல உடல் தோற்றம் என்றாலும் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாவது கதாநாயகியாக ஜனனி பாத்திரத்தில் வின்சிட்டா ஜார்ஜ் வருகிறார். கிராமத்துப் பெண்ணுக்கேற்ற தோற்றத்துடன் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். நில அபகரிப்பு வில்லனாக வரும் விஜய் கௌதம் , அதிக சேதாரங்கள் இல்லாமலேயே வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.
அஞ்சலியின் அண்ணனாக வரும் யோகிராம், வழக்கம் போல காதலுக்கு குறுக்கே நிற்பவராக வருகிறார்.
மேலும் படத்தில் துணைப் பாத்திரங்களில் வரும்
ரஞ்சன் குமார், விஜித் சரவணன்,ஜே.பீரான் , சிவசேனாதிபதி, குமர வடிவேல் ஆகியோரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள்.
இயக்கம்
ஓர் எளிமையான காதல் கதையை விவசாயப் பின்னணியில் எடுத்துக் கொண்டு கூறியிருக்கிறார்கள். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆதரவாக படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் பாராட்டுக்கிறியவை. நடிகர்கள் மத்தியில் இன்னும் சரியாக வேலை வாங்கி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஆர். பி செல்வவின்
இசை
ஜே ஜானகிராஜின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
சுபலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது









