என் மலர்


ட்ரான் ஏர்ஸ்
ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை காண்பிக்கும் படம் ட்ரான் ஆரஸ்.
டெலிஞ்சர் என்கிற நபர் தனக்கு என ஒரு டிஜிட்டல் உலகத்தை உருவாக்குகிறார். அந்த டிஜிட்டல் உலகத்தில் ஆரஸ் என்கிற ஒரு மனிதனையும் உருவாக்குகிறார். அந்த ஆரஸை டிஜிட்டல் உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்து ஆர்மி-க்கு கொடுக்க முயற்சிக்கிறார்.
ஆனால், நிஜ உலகத்தில் ஆரஸால் 29 நிமிடம் மட்டுமே இருக்க முடியும். அதற்கு பிறகு, ஆரஸ் கரைந்து போய்விடும்.
டெலிஞ்சருக்கு போட்டி கம்பெனியான என்காம் என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஈவ், டிஜிட்டல் உலகில் இருப்பதை நிஜ உலகில் நிரந்தரமாக கொண்டு வரும் கோட் கண்டுபிடிக்கிறார்.
ஈவ்-ன் முயற்சியை தெரிந்துக் கொண்ட டெலிஞ்சர் உடனே என்காமின் சர்வரை ஹேக் செய்து, ஈவ்-ஐ ஆரஸ் உதவியுடன் கடத்துகிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் ஆரஸ்-க்கு கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகள் வர, டெலிஞ்சர் நம்மை அழிவுக்கு பயன்படுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பின்னர், ஈவ் பக்கம் திரும்பும் ஆரஸ், நீ என்னை காப்பாற்றினால், நான் உன்னை நிஜ உலகிற்கு நிரந்தரமாக கொண்டு வருகிறேன் என்று டீல் போடுகிறது.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
ஜாரெட் லெட்டோ, கிரெட்டா லீ, ஈவன் பீட்டர்ஸ், ஹசன் மிர்னாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித், ஆர்ட்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனாகன், ஜில்லியன் ஆண்டர்சன், மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.
இயக்கம்
ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை இயக்குனர் ஜோச்சிம் ரோன்னிங் எல்லோருக்கும் புரியும் படி பிரமாண்டத்துடன் எடுத்துள்ளார்.
அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யும் இடம், அதை எதோ போர் போல் 5 ப்ரோகிராம் மனிதர்கள் சாப்ட்வேர் உள்ள வருவது, அதை எதிர்க்க வரும் ஆண்டி வைரஸ் மனிதர்கள் என கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார் இயக்குனர்.
இசை
பின்னணி இசை அபாரம்.
ஒளிப்பதிவு
டெக்னிக்கலாக படம் வேற லெவல். படம் முழுக்க காட்சிகள், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் விஸ்வல் ட்ரீட்டாக இருந்தது.








