என் மலர்


டிக்டாக்
ஸ்கேரி கவுஸில் இருக்கும் பேய் குறித்த கதை.
கதைக்களம்
கதாநாயகன் ராஜாஜி மாணிக்கமும் அவரது நண்பரும் ஏதாவது தொழில் செய்து முன்னேறலாம் என்று நினைக்கிறார்கள். அப்போது சுஷ்மா ராஜ் வீட்டை வாடகைக்கு கேட்கிறார்கள். ஆனால் சுஷ்மா ராஜ், இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட மறுக்கிறார்.
இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் சுஷ்மா ராஜ் ஒரு தொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறார். அப்போது மால் ஒன்றில் ஸ்கேரி கவுஸ் தொழிலை ஒருவர் நடத்திவிட்டு பாதியில் விட்டு சென்றிருப்பார். இதனை சுஷ்மா ராஜ் ஏற்று நடத்த விரும்புகிறார். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இல்லாததால் ராஜாஜி மற்றும் அவரது நண்பரை அணுகி மூவரும் சேர்ந்து நடத்த திட்டமிடுகிறார்.
அவர்களும் சம்மதம் சொல்லவே மூவரும் இணைந்து ஸ்கேரி கவுஸ் தொழிலை தொடங்குகின்றனர். ஆரம்ப காலத்தில் இந்த தொழில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனால் இவர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த ஸ்கேரி கவுஸில் பேய் இருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் இந்த பேய் யார்? இதனிடம் இருந்து மூவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகன் ராஜாஜி மாணிக்கம் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகி சுஷ்மா ராஜ், பிரியங்கா அருள் மோகன், முருகானந்தம் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
ஹாரர்-த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியுள்ளனர் எம்.கே. குழு. முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி தொய்வையும் ஏற்படுத்தியுள்ளது வருத்தம். இயக்குனர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
செபாஸ்டியன் ரோசாரியோ இசை சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
முருகன் செல்லப்பா மற்றும் டோனி சான் இருவரும் ஹாரர் திரைப்படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கொடுத்துள்ளனர்.
படத்தொகுப்பு
ராஜேஷ் செல்வராஜ் படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
எம்.கே. எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் ‘டிக்டாக்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.










