என் மலர்


தக் லைப்
.
கதைக்களம்
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் நாயகன் கமல்ஹாசன். அதே ஊரில் மற்றொரு தாதாவாக இருக்கும் மகேஷ் மஞ்சரேக்கருக்கும் கமலுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொள்ள சதி நடக்கிறது.
அப்போது சிறுவனாக இருக்கும் சிலம்பரசனை வைத்து கமல்ஹாசன் அந்த சதியிலிருந்து தப்புகிறார். அதிலிருந்து சிலம்பரசனை கமல்ஹாசன் உடன் வளர்கிறார். தனக்கு அடுத்து சிலம்பரசனை தொழிலில் இறக்க கமல்ஹாசன் விரும்புகிறார்.
ஒரு கட்டத்தில் சிலம்பரசன் தனக்கு எதிராக செயல்படுவதாக கமல்ஹாசன் சந்தேகப்படுகிறார். இது ஒரு கட்டத்தில் உண்மையாகவும் மாறுகிறது. இதனால் கமல்ஹாசனை கொலை செய்து அவரது இடத்தை தட்டிப் பறிக்க சிம்பு ஆயத்தமாகிறார்.
இறுதியில் கமல் இடத்தை சிலம்பரசன் பிடித்தாரா? சிலம்பரசனின் சதி திட்டம் பலித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை .
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கமல் ஹாசன் தாதாவாக உடல் மொழியிலும், பேச்சிலும் மிரட்டி இருக்கிறார். இளமையான தோற்றத்தில் வரும்போது நாயகன் படத்தை நினைவு கூறுகிறார். மனைவியாக வரும் அபிராமி, காதலியாக திரிஷா என காதல் மன்னனாகவும் கலக்குகிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
கமல் ஹாசனுக்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார் சிலம்பரசன். கமலுடன் அவர் வரும் காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. கமல்ஹாசனை தீர்த்து கட்ட திட்டம் போடும்போது வில்லத்தனத்தால் பயமுறுத்துகிறார்.
திரிஷாவின் அழகு மனதைக் கொள்ளை அடிக்கிறது. கமல்ஹாசன் உடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அபிராமி குடும்பபாங்கான முகமாக வருகிறார். இரண்டாம் பாதியில் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ரவுடிகளாக வரும் நாசர், ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி என அனைவருமே அவரது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம்
வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும், கமல்ஹாசன் என்ற ஆளுமையை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை நகர்த்தி, மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடையே வேலை வாங்கிய விதம் அருமை. விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மிரட்டல். கேமராவை 360 டிகிரியில் சுழற்றி வித்தை காட்டியுள்ளார்.
இசை
ஏ.ஆர் ரகுமானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
தயாரிப்பு
ராஜ் கமல் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Super movie
Ulaga Nayagan Acting Super














