என் மலர்


தீர்க்கதரிசி
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்பால் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.
கதைக்களம்
காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீமன். கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு நபர் தொடர்பு கொண்டு சென்னையில் சில குற்றச் செயல்கள் நடக்கப்போவதாக கூறுகிறார். அவர் கூறும்படி குற்றச் செயல்களும் நடக்கிறது. இதைப்பற்றி விசாரிக்க காவல் அதிகாரி அஜ்மல் களம் இறங்குகிறார். தீவிர விசாரணையில் ஈடுப்பட்டும் அஜ்மலின் குழுவால் இந்த செயல்களை செய்வது யார் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அந்த நபரை பொதுமக்கள் தீர்க்கதரிசி என்ற அழைக்கின்றனர். அதேபோல் அந்த நபர் ஊடகத்திற்கும் இந்த தகவலை சொல்கிறார். இதனால் காவல் துறையின் அலட்சியப்போக்கை ஊடகத்தினர் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். மறுபுறம் மக்கள் இதை யார் செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். இறுதியில் யார் இந்த செயல்களை செய்கிறார்? தீர்க்கதரிசி இந்த தகவலை கொடுக்க காரணம் என்ன? காவல்துறை இந்த செயல்களை செய்தவர்களை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து பாராட்டுக்களை பெறுகிறார். சத்யராஜின் கதாபாத்திரம் நேர்த்தியாகவும், கதைக்கான பின்னணியை அழுத்தமாகவும் விவரிக்கிறது. இவரின் முதிற்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
காவல்துறை அதிகாரி அஜ்மலுக்கு கீழ் பணியாற்றும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் படத்திற்கு சிறப்பான தேர்வு. ஸ்ரீமன் அவருடைய பணியை சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தில் தோன்றும் பிற கதாப்பாத்திரங்கள் கூடுதல் பலம்.
இயக்கம்
படத்தின் நீரோட்தில் இருந்து திரைக்கதையை விலகாமல் அழகாக கையாண்டுள்ளனர் இயக்குனர்கள் பி. ஜி. மோகன் - எல். ஆர். சுந்தரபாண்டி. இருந்தாலும் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. படத்தில் சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கிளைமேக்ஸில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
பின்னணி இசையின் மூலம் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமனியன்.
ஒளிப்பதிவு
ஜே. லக்ஷ்மனனின் ஒளிப்பதிவு சிறப்பு.
படத்தொகுப்பு
ரன்ஜீத் சி.கே படத்தொகுப்பில் கலக்கியுள்ளார்.
புரொடக்ஷன்
ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ’தீர்க்கதரிசி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









