என் மலர்


தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்
சிறப்பு சக்தி கொண்ட நான்கு நபர்கள் உலகை காக்க போராடும் கதையாகும்.
கதைக்களம்
வழக்கம் போல இந்த ஃபெண்டாஸ்டிக் 4 டீமிற்கு ஸ்பேசிற்கு சென்று அங்கு நடந்த விபத்தினால் 4 நபர்களுக்கு மட்டும் மனித ஆற்றலை தாண்டி சிறப்பு சக்தி கிடைக்கிறது, இதனால் மக்கள் இவர்களை நம்மை காப்பாற்றும் தேவர்கள் என்பது போல் கொண்டாடி வருகின்றனர்.
அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஷால பெல் என்கிற ஒரு ஸ்டீல் பெண் வருகிறார், அவர் இந்த உலகத்தையே அழிக்க Galactus வருகிறார் என எச்சரித்து செல்கிறார். அவரை பின் தொடர்ந்து பெண்டாஸ்டிக் 4 டீம் ரீட், சுசு, பென், ஜானி ஆகிய செல்கின்றனர்.
இதில் ரீட், சுசு தம்பதியினர், சுசு கர்ப்பமாக உள்ளார். ஸ்டில் பெண்ணை பின் தொடர்ந்து செல்ல, அங்கு Galactus-வுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
Galactus, சுசு-விற்கு பிறக்கும் குழந்தை எனக்கு வேண்டும், கொடுத்தால் உங்கள் உலகை விடுகிறேன் என சொல்ல, உலகத்தை காப்பாற்ற குழந்தையை கொடுத்தார்களா?, இல்லை வேறு வழியில் Galactus-யை அழித்து உலகத்தை காப்பாற்றினார்களா என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ஃபண்டாஸ்டிக் 4 டீமாக நடித்திருக்கும் வனேசா கிர்பி, பெட்ரோ பாஸ்கல், ஜோசஃப் க்வின், ஜூலியா கார்னர் என அனைவரும் அவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
பழைய ஃபெண்டாஸ்டிக் 4 படத்தின் அடித்தள கதையை கொண்டிருந்தாலும். இப்படத்தில் எமோஷனல் காட்சிகளுக்கு அதிகம் மெனெக்கெடல் செய்துள்ளனர்.குறிப்பாக சுசு தன் குழந்தையை காப்பாற்ற வான் அளவு உயர்ந்து நிற்கும் Galactus-யை தடுத்து நிறுத்த தன் உயிரையே கொடுக்கும் நிலைக்கு போராடும் இடமெல்லாம் எல்லா ஊரிலும் அம்மா செண்டிமெண்ட் ஒர்க் ஆகும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ஒளிப்பதிவு
ஜெஸ் ஹால் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசை
மைக்கேல் ஜியாசினோ- இன் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது
தயாரிப்பு
மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










