என் மலர்


தி பாய்ஸ்
கொரோனா காலத்தில் சென்னையில் வீட்டில் BAR நடத்தும் பேச்சலர்களின் கதை
கதைக்களம்
கொரோனா காலகட்டத்தில் நடக்க கூடிய கதையாக அமைந்து இருக்கிறது. 5 நண்பர்கள் சேர்ந்து சென்னையில் பேச்சிலராக இருக்கின்றனர். அதில் சிலர் வேலையிலும் சிலர் வேலையை தேடிக்கொண்டு இருக்கின்றனர். வேலை நேரத்தை தவிர மிச்ச நேரங்களில் இவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை குடி குடி குடி மட்டும் தான்.
இவர்கள் வருமான சிக்கலின் காரணமாக சரக்கை ப்ளாக்கில் விற்க முடிவு செய்கின்றனர் . பின் அதற்கு நல்ல வரவேற்பு பெற்றவுடன் இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே தி பாய்ஸ் என்ற பாரை துவங்குகின்றனர். இதனால் அக்கம்பக்கம் வீட்டார்கள் போலிஸிடம் புகார் அளித்து வீட்டை காலிசெய்ய வைக்கின்றனர்.
பின் இவர்கள் அனைவரும் தனியாக ஒரு பிரைவேட் வீட்டில் வாடகைக்கு செல்கின்றனர். அப்பொழுது தான் ஊரடங்கு அடுத்து 1 மாதத்திற்கு அமலுக்கு வரப்போகிறது என செய்தி வெளியாகிறது. அப்பொழுது இவர்கள் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி ரூமில் அடுக்கி அதை ஊரடங்கு சமையத்தில் விற்று பெரும் காசாக்கலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் ஊரடங்கினால் இவர்களின் பாரை நடித்த முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். எதிர்ப்பார்காமல் அவர் தங்கி இருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்யம் நடைப்பெறுகிறது. அதற்கடுத்து என்ன ஆகியது? வீட்டில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
ஷா ரா , கலக்கபோவது யாரு வினோத், அர்ஷ்த், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்கம்
சந்தோஷ் பி ஜெயக்குமார் நண்பர்களிடையே ஒரு ஜாலியான படமாக இயக்கியுள்ளார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தில் நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. சுவாரசியாமாக கதை சென்றுக் கொண்டு இருக்கும்பொழுது திடீரென்று தொய்வு ஏற்படுகிறது.
இசை
படத்தின் காட்சிகளுக்கு ஏற்றவாறு அருண் கவுதமின் இசை படத்துக்கு கை கொடுக்கின்றது.
ஒளிப்பதிவு
பெரும்பாலான படத்தின் காட்சிகள் வீட்டிற்குள்ளே நகர்கிறது. அதற்கேற்ப சிரப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தயாரிப்பு
டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.











