என் மலர்tooltip icon
    < Back
    தலைவன் தலைவி திரைவிமர்சனம் | Thalaivan Thalaivii  Review in tamil
    தலைவன் தலைவி திரைவிமர்சனம் | Thalaivan Thalaivii  Review in tamil

    தலைவன் தலைவி

    இயக்குனர்: பாண்டிராஜ்
    எடிட்டர்:பிரதீப் ஏ ராகவா
    ஒளிப்பதிவாளர்:எம் சுகுமாறன்
    இசை:சந்தோஷ் நாராயணன்
    வெளியீட்டு தேதி:2025-07-25
    Points:27852

    ட்ரெண்ட்

    வாரம்12345678
    தரவரிசை2619912217924
    Point433294458262373491185928128
    கரு

    குடும்பத்தில் நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி, தந்தை சரவணன், தாய் தீபா மற்றும் தங்கை, தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வளநாட்டை சேர்ந்த நித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். பார்த்தவுடனே இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். சில நாட்களில் விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, மற்றும் தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, நித்யா மேனன் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர்.

    ஆனால், தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்கிறார். நித்யா மேனன் திருமணம் ஆன சில நாட்களில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு பிரிகிறார்கள். இதை காரணமாக வைத்து இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

    இறுதியில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இருவருக்கும் என்ன தான் பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாயா, மனைவியா என்று பரிதவித்து நடித்து இருக்கிறார். ஆனால் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சண்டை போடுவது, அடிப்பது, காதலிப்பது என்று அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். சரவணன், தீபா, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், வினோத் சாகர், சென்றாயன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.

    இயக்கம்

    குடும்பத்தில் நடக்கும் சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். குறிப்பாக கணவன் மனைவி பிரச்சனை, தன்மான உணர்வு, விட்டு கொடுத்து போதல் ஆகியவற்றை திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார். கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டைக்கு விவாகரத்து முடிவு கிடையாது என்று சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். படம் முழுக்க கதாபாத்திரங்கள் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியை பார்க்கும் போது, அது காமெடி காட்சியா, சீரியஸான காட்சியா என்று தெரியவில்லை.

    இசை

    சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மட்டுமே தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையை காட்சிகளுக்கு ஏற்றார் போல் கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    தயாரிப்பு

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2025-08-04 07:08:22.0
    vigneshwari kumar

    Super Movie

    ×