என் மலர்


டென் ஹவர்ஸ்
பத்து மணி நேரத்தில் நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.
கதைக்களம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் சிபிராஜ். சபரிமலைக்கு விரதம் இருந்து ஒரு நாள் இரவு கோவிலுக்கு புறப்படும் போது ஒரு பெண்ணை காணவில்லை என போலீசுக்கு தகவல் வருகிறது.
காணாமல் போன பெண்ணை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் விசாரணையை தொடங்கும் போது பல கொலை சம்பவங்கள் நடக்கிறது.
இறுதியில் கொலைக்கான காரணத்தை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? கொலையாளி யார்? குற்றவாளிகளை சிபிராஜ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தின் நாயகனாக நடித்து இருக்கும் சிபிராஜ் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் மொத்த கதையையும் சுமந்து நடித்துள்ளார். சபரிமலைக்கு மாலை அணிந்து நெற்றி நிறைய பட்டை அணிந்து அவர் துப்பறியும் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இல்லாத மாறுபட்ட கதை களத்தில் நடித்திருக்கும் சிபிராஜூக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது இருக்கிறது.
சிபிராஜோடு வரும் சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ் காட்சிகள் படத்துக்கு கூடுதல் பலம். டாக்டராக வரும் ஜீவாரவி, ஆம்னி பஸ் கிளீனராக வரும் முருகதாஸ் மற்றும் திலீபன், உதயா, சரவணசுப்பையா, சருமிஷா நிரஞ்சனா ஆகியோரது நடிப்பு படத்துக்கு பக்க பலமாக அமைந்து உள்ளது.
இயக்கம்
ஒரே இரவில் நடக்கும் பல சம்பவங்களை அடுத்தடுத்து என்ன என்று எதிர்பார்ப்போடு பார்க்கும் வகையில் பார்வையாளர்களை கொண்டு சென்று மாறுபட்ட திரில்லரோடு ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள். கதாநாயகி இல்லாமல், பாடல் இல்லாமல் முற்றிலும் சஸ்பென்சாக படம் நகர்த்தி இருப்பது சிறப்பு. ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் நடக்கும் பல சம்பவங்களை பரபரப்பாக ஆரம்பம் முதல் முடிவு வரை சஸ்பென்ஸ் திரில்லராக பார்த்து ரசிக்க வைக்கிறது 'டென் ஹவர்ஸ்'. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம்.
இசை
கே.எஸ். இசை ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு
கார் சேசிங் காட்சிகளில் ஜெய்கார்த்திக் ஒளிப்பதிவு பாராட்டும்படி உள்ளது.
தயாரிப்பு
Duvin ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.










