search icon
என் மலர்tooltip icon
    < Back
    Takkar
    Takkar

    டக்கர்

    இயக்குனர்: கார்த்திக் ஜி கிரிஷ்
    எடிட்டர்:ஜி.ஏ.கௌதம்
    ஒளிப்பதிவாளர்:வாஞ்சிநாதன் முருகேசன்
    இசை:நிவாஸ் கே பிரசன்னா
    வெளியீட்டு தேதி:2023-06-09
    Points:1756

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை5564675051
    Point77683794418
    கரு

    பணம் மற்றும் வாழ்க்கையை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் இருவர் சந்திக்கும் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் சித்தார்த் இருக்கிறார். இதற்காக தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் ஒவ்வொரு இடமாக மாறி மாறி வேலை செய்து வருகிறார். எந்த வேலையிலும் அவரால் நீடிக்க முடியவில்லை. கடைசியாக பென்ஸ் கார் டிரைவராக சித்தார்த் வேலைக்கு சேர்கிறார்.

    இதனிடையே வசதி மிகுந்த குடும்பத்தில் வாழும் திவ்யான்ஷா கௌஷிக்கை சந்திக்க நேர்கிறது. மறுபுறம் பணத்திற்காக இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்யும் ஒரு கும்பல் திவ்யான்ஷா கௌஷிக்கை கடத்த முயற்சி செய்கிறது. அப்போழுது சித்தார்த் டிரைவராக பணிபுரியும் கார் சேதமடைய, மிக விலையுரந்த கார் என்பதால் இதனை ஈடு செய்ய சில வருடங்கள் சித்தார்த் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று காட்டாயம் ஏற்படுகிறது. மேலும் சித்தார்த்தை தரக்குறைவாக நடத்தி விடுகின்றனர்.

    இதனால் மனமுடையும் சித்தார்த் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அச்சமயம் ஒரு சில பிரச்சினை ஏற்பட கடத்தல் கும்பலை சித்தார்த் அடித்து நொறுக்கி, அங்கிருந்து தப்பிப்பதற்காக அவர்களின் காரை எடுத்து வருகிறார். அந்த காரின் டிக்கியில் திவ்யான்ஷா கௌஷிக் இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது? கடத்துல் கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஏழை குடும்பத்து இளைஞனாக வரும் சித்தார்த், நடிப்பில் மூலம் கவனம் பெறுகிறார். பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் இவர் எடுக்கும் முயற்சிகள் கைத்தட்டல் பெறுகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

    திவ்யான்ஷா கௌஷிக் கிளாமரிலும், காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பணம் வாழ்க்கையின் முக்கியமான விஷயம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இவருடைய கதாப்பாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.

    யோகிபாபுவின் கலக்கல் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறது. மேலும் படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை அழகாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    பணம் வாழ்க்கையில் எந்த மாதிரியான விஷயத்தை செய்கிறது என்பதை மையப்படுத்தி படத்தை நகர்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ். படத்தின் கதாப்பாத்திர தேர்வு பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செல்லுத்தியிருக்கலாம். சில இடங்களில் சற்று தொய்வு ஏற்படுவது போன்ற எண்ணம் தோன்றுகிறது.

    இசை

    நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு உதவி இருக்கிறது.

    படத்தொகுப்பு

    ஜி.ஏ.கவுதம் படத்தொகுப்பு அசத்தல்.

    புரொடக்‌ஷன்

    பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘டக்கர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×