என் மலர்


ஸ்வீட்ஹார்ட்
எதிர்ப்பாராத சூழ்நிலையில் உருவாகும் கரு அதனை சமாளிக்கும் காதலர்களின் கதையாக அமைந்துள்ளது.
கதைக்களம்
சிறுவயதில் இருந்தே தாய் மற்றும் தந்தையை இழந்து வாழ்ந்து வருகிறார் கதாநாயகனான ரியோ ராஜ். இதனால் இவரது மனநிலை எந்த ஒரு உறவு முறையும் நீண்ட காலத்திற்கு நிலைக்காது எல்லாமே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கட்சேரியின் மூலம் கதாநாயகியான கோபிகாவை சந்திக்கிறார் ரியோ. நாளடைவில் இருவரும் பேசி பழகுகிறார்கள். கோபிகாவிற்கு ரியோ மீது காதல் ஏற்படுகிறது ஆனால் ஆரம்பத்தில் ரியோ இதனை தவிர்த்து வருகிறார். பின் இருவரும் ஒருக்கட்டத்தில் காதலில் ஈடுப்பட்டு நெருங்கி பழகி வருகின்றனர். இவர்களது காதலை தெரிந்து கொண்ட கோபிகாவின் வீட்டில் அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து ரியோவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்கின்றனர். இந்நிலையில் கோபிகா ரமேஷ் கர்ப்பம் ஆகிறாள். இதை தெரிந்துக் கொண்ட ரியோ குழந்தையை களைத்து விடலாம் என கூறுகிறார் ஆனால் கோபிகா களைக்க வேண்டாம் என கூறுகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ரியோராஜ் கதாப்பாத்திரத்திற்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளார். கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ரொமான்ஸ், பிரேக் அப் என நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். கோபிகா ரமேஷ்-ற்கு சிறந்த அறிமுக திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக ரியோவிற்கு நண்பராக நடித்து இருக்கும் அருணாச்சலேஷ்வரன் படம் முழுக்க வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் ஃபௌஸி சிறப்பாக அவரது வேலையை செய்துள்ளார்.
படத்தில் நடித்த ரென்சி பானிக்கர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் அவர்களுக்கு கொடுத்த வேலையை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் அதை இக்காலத்திற்கு ஏற்ப மாடர்னாக படைத்திற்கும் விதத்திற்காக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமாருக்கு பாராட்டுகள். காதல், ப்ரேக் அப், ரொமான்ஸ், எமோஷனல் என குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மிகவும் எமோஷனலாக வைத்து பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்து இருக்கிறார்.
இசை
யுவனின் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம் ஆனால் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு படத்தின் பலமாக அமைந்துள்ளது. மிகவும் கலர்ஃபுல்லாக காட்சிகளை அமைத்துள்ளார்.
தயாரிப்பு
யுவனின் YSR Films நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










