என் மலர்


சூப்பர்மேன்
நாம் இதுவரை பார்த்திடாத ஒரு சூப்பர் மேன் படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கன்.
கதைக்களம்
பொரேவியன் நாடு பக்கத்து நாட்டை அழிக்க திட்டமிடுகிறது. இந்த திட்டத்தை சூப்பர் மேன் தடுத்து நிறுத்துகிறார். ஆனால் இந்த போர் நிறுத்தத்தினால் பாதிக்கப்படுவது தொழிலதிபரான லூதர் ஆவார். ஏனெனில் அந்த போர் தொடுக்கும் நாட்டிலிருந்து ஏதோ ஒரு பயன் பெற நினைக்கிறார். எனவே அவருக்கு அந்த ஊரை அழித்தே ஆக வேண்டும்.
இதனால் அவர் சூப்பர் மேன் மீது தன் நாட்டை அழித்து மக்களை எல்லாம் அடிமை படுத்த வந்தவன் என பழி சுமத்தி அவரை தான் உருவாக்கிய ஒரு சிறையில் அடைத்து விடுகிறார். இந்த தடைகளை எல்லாம் தாண்டி சூப்பர் மேன் தப்பித்து தன் நாட்டு மக்களை காப்பாற்றினாரா? லெக்ஸ் லூதரின் திட்டத்தை முறியடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
சூப்பர் மேனாக நடித்திருக்கும் டேவிட் காரன்ஸ்வெட் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சண்டை காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
படத்தின் வில்லனாக நடித்திருக்கும் நிக்கோலஸ் ஹால்ட் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். மிகச்சிறந்த வில்லன் கதாப்பாத்திரமாக பார்வையாளர்களின் மனதில் பதிகிறார். படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
சூப்பர் மேனின் கதையம்சம் ஒரே விஷயமாக இருந்தாலும். அதை ஒவ்வொரு பாகத்திலும் வித்தியாசமாக காட்டுவதே இயக்குநரின் சிறப்பாகும். நாம் இதுவரை பார்த்திடாத ஒரு சூப்பர் மேன் படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கன்.
படத்தின் வித்தயாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதை படத்தின் பலமாக அமைந்துள்ளது. மேலும் சூப்பர் மேனின் செல்ல பிராணியாக வரும் கிரிப்டோ நாய் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார். படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். படத்தில் எமோஷனல் காட்சிகள் இல்லாதது மைனஸ்.
ஒளிப்பதிவு
Henry Braham- இன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இசை
டேவிட் ஃப்லெமிங் மற்றும் ஜான் மர்ஃபி பின்னணி இசை கேட்கும் ரகம்
தயாரிப்பு
The Safran கம்பெனி நிறுவனம் இப்படத்தை தயார்த்துள்ளது.









