என் மலர்


சித்தாரே ஜமீன் பர்
கேலி, கிண்டல் செய்யும் குணமுடைய அமிர்கானுக்கு மாற்றுத்திறனாளிகளை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய பணி கொடுக்கப்படுகிறது.
கதைக்களம்
டெல்லி ஸ்போர்ட்ஸ் அசோசியனில் பேஸ்கட் பால் ஜூனியர் பயிற்சியாளராக இருக்கிறார் அமிர்கான். இவர் குள்ளமாக இருப்பதால் அவ்வப்போது இவரை அவரது சீனியர் பயிற்சியாளர் உருவ கேலி செய்கிறார். ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த அமீர்கான் சீனியர் பயிற்சியாளரை அடித்து விடுகிறார். இதனால் அவரது பதவி பறிபோகிறது. அதற்கு பின் மதுவிற்கு அடிமையாகுகிறார்.
ஒருநாள் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, போலீஸ் வாகனத்தில் மீது மோதுகிறார். இதன் காரணமாக இவரை கைது செய்து நீதிபதியிடம் ஒப்படைக்கின்றனர். அமிர்கான் சிறை தண்டனைக்கு பதிலாக சமூக சேவை செய்கிறேன் என ஒப்புக்கொள்கிறார். அதனால் அமிரை மாற்றுத்திறனாளிகளுக்கு பேஸ்கட் பால் பயிற்சி செய்ய உத்தரவிடுகின்றனர்.
மற்றவர்களை கேலி, கிண்டல் செய்யும் குணமுடைய அமிர்கான் மாற்றுத்திறனாளிகளை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய பணி கொடுக்கப்படுகிறது.
அதனை அவர் சரியாக செய்து முடித்தாரா? அதில் அவர்படும் கஷ்டங்கள் என்ன? இதனால் அமிர் வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
அமிர் கான் அவரது யதார்த்த நடிப்பால் பார்வையாளர்களை கவர்கிறார். மாற்றுத்திறனாளிகளாக படத்தில் வரும் அனைவருமே அவர்களது பங்கை திறம்பட செய்துள்ளனர். ஜெனிலியாவின் கதாப்பாத்திரம் படத்தின் இரண்டாம் பாதியில் ரசிக்கும்படியுள்ளது.
இயக்கம்
2007ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைபோடுபோட்ட 'தாரே ஜமீன் பர்' படத்தின் இன்னொரு வெர்சனாக இப்படத்தை இயக்கியுள்ளார் ஆர்.எஸ்.பிரசன்னா.
சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால், எமோஷனை விட காமெடிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் ஒரு இயல்பு இருக்கிரது, அதேப்போல் மாற்று திறனாளிகளுக்கும் ஒரு இயல்பு இருக்கு அவர்களை வேறொரு தனிநபராக பார்க்காமல், அவர்களுடைய இயல்பில் அவரை பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவிட்ட இயக்குநருக்கு பாராட்டுகள். படத்தின் நேரளவை சிறிது குறைத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
ஷங்கர் மகாதேவன் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஸ்ரீனிவாச ரெட்டி படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக காட்சி படுத்தியுள்ளார்.
தயாரிப்பு
இப்படத்தை அமிர் கான் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.









