search icon
என் மலர்tooltip icon
    < Back
    Siren
    Siren

    சைரன்

    இயக்குனர்: ஆண்டனி பாக்யராஜ்
    எடிட்டர்:ஆண்டனி எல் ரூபன்
    ஒளிப்பதிவாளர்:செல்வகுமார் எஸ்.கே
    இசை:ஜிவி பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:2024-02-16
    Points:9022

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை1510
    Point30765946
    கரு

    பலருடைய வாழ்க்கையை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை சொல்லும் படம்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஆயுள் தண்டனை கைதியான ஜெயம் ரவி பரோலில் தன் குடும்பத்தை சந்திக்க வருகிறார். இவர் வந்த நேரத்தில் அரசியல்வாதிகள் இரண்டு பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜெயம் ரவிதான் என்று போலீஸ் அதிகாரி கீர்த்தி சுரேஷ் சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

    அதே அரசியல் வாதிகளால் சஸ்பென்ட் செய்யப்பட்டு மீண்டும் பணிக்கு வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தான் இந்த கொலைகளை செய்திருக்கக்கூடும் என்று போலீஸ் உயர் அதிகாரி சமுத்திரகனி சந்தேகப்படுகிறார்.

    இறுதியில் அந்த அரசியல்வாதிகளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஜெயம் ரவி ஜெயிலுக்கு சென்ற காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். இளமை மற்றும் நடுத்தர மனிதன் தோற்றத்திற்கு வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். இவரின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகள். அப்பா மகள் பாசத்தில் நெகிழ வைத்தது இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மிடுக்கான தோற்றத்தில் இறுக்கமான முகத்துடன் நடித்து கவர்ந்து இருக்கிறார். குற்றவாளியை தேடும் முயற்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கு அதிகம் வேலை இல்லை. இவரது கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

    பல படங்களில் சாதி எதிர்ப்புக்கு குரல் கொடுத்த சமுத்திரகனி, இப்படத்தில் சாதி வெறியனாக நடித்து அசத்தி இருக்கிறார். அவர் நம்ம ஆளுங்க என்று சொல்லும் போது நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஆம்புலன்ஸ் டிரைவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ். கிரைம் திரில்லர் திரைக்கதையில் அப்பா மகள் பாசம், சமூக பிரச்சனை, காதல், குறிப்பிட்ட பிரிவினரின் அடக்குமுறை ஆகியவற்றை பற்றி பேசியிருக்கிறார். பலருடைய வாழ்க்கையை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை மாறியது என்பதை சொல்லி இருக்கிறார்.

    இசை

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் சாம் சி.எஸ்.

    ஒளிப்பதிவு

    செல்வகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    படத்தொகுப்பு

    ரூபனின் படத்தொகுப்பில் காட்சிகள் அனைத்தும் கச்சிதம்.

    புரொடக்‌ஷன்

    ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘சைரன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-02-19 07:37:55.0
    rathish kumaran

    2024-02-16 19:08:50.0
    Surendran Azhakesan

    Jayam Ravi🔥🔥

    ×