search icon
என் மலர்tooltip icon
    < Back
    Singapore Saloon
    Singapore Saloon

    சிங்கப்பூர் சலூன்

    இயக்குனர்: கோகுல்
    எடிட்டர்:செல்வா ஆர்கே
    ஒளிப்பதிவாளர்:எம் சுகுமாறன்
    இசை:ஜாவேத் ரியாஸ்
    வெளியீட்டு தேதி:2024-01-25
    Points:4738

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை668
    Point3955783
    கரு

    இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வேண்டும் என்று நினைக்கும் இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நெருங்கிய நண்பர்களான ஆர்.ஜே.பாலாஜியும் கிஷன் தாஷும் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். அந்த ஊரின் முடிதிருத்தும் தொழிலாளியான லாலின் சிகையலங்காரத்தில் ஈர்க்கப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார். தானும் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வேண்டும் என்று கனவு காண்கிறார்.

    இதன் முதல்கட்ட படியாக கல்லூரி படிப்பை முடித்ததும் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு சேருகிறார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து தனியாக சிங்கப்பூர் சலூன் என்ற கடையை தொடங்க நினைக்கிறார். ஆனால், இந்த கடையை தொடங்குவதில் பல பிரச்சனைகள் வருகிறது.

    இறுதியில் ஆர்.ஜே.பாலாஜி தான் நினைத்தது போன்று கடையை திறந்தாரா? அந்த பிரச்சனைகள் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    காமெடியில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க முயற்சித்துள்ளார். தன் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். கதாநாயகி மீனாட்சி சவுத்திரிக்கு படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை.

    முடிதிருத்தும் தொழிலாளியாக வரும் லால் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும் படி நடித்துள்ளார். மகனின் லட்சியத்துக்கு ஒரு தந்தை எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தால் அவன் முன்னேறுவான் என்பதற்கு உதாரணமாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார்.

    சத்யராஜ்- ரோபோ சங்கர் கூட்டணிகாமெடியில் பட்டையை கிளப்பியுள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, ஜீவா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்கம்

    முடிதிருத்துவது குலத்தொழில் அல்ல கலை என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கோகுல். முதல் பாதியில் காமெடி மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளார். இரண்டாம் பாதியை செண்டிமெண்டாக கொண்டு சென்றுள்ளார்.

    இசை

    ஜாவேத் ரியாஸ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கும் அளவில் இல்லை.

    ஒளிப்பதிவு

    எம். சுகுமார் ஒளிப்பதிவு ரசிக்க வைத்துள்ளது.

    படத்தொகுப்பு

    செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு அருமை.

    காஸ்டியூம்

    திவ்யா நாகராஜன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×