என் மலர்


ஷின் சான் : எங்கள் டைனோசர் டைரி
ஷின் சான் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து டைனோசருடன் செய்யும் லூட்டியை பற்றிய கதை
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்தில் ஒரு குட்டி டைனோசரை ஒருவர் கடத்தி செல்கிறார். மறுபக்கம் ஷின் சான் அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர்கள் இருக்கும் ஊரில் டைனோசர் தீம் பார்க் ஒன்றை திறக்கின்றனர். அந்த டைனோசர் தீம் பார்க்கிற்கு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அதை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த தீம் பார்க்கை பார்க்க ஷின் சான் ஆசைப்படுகிறார் ஆனால் டிக்கெட் கிடைக்காதலால் வருத்தம் அடைகிறார்.
ஷின் சானின் பணக்கார நண்பரிடம் அந்த தீம் பார்க்கிற்கான டிக்கெட் இருப்பதால் அவரின் உதவியால் அங்கு செல்கின்றார். அந்த டைனோ தீம் பார்க்கில் இருந்து ஒரு டைனோசர் தொலைந்து விட்டதாக தகவல் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து அந்த குட்டி டைனோசர் ஷின் சான் இருக்கும் பகுதியில் இருக்கிறதை ஷின் சான் கண்டுப்பிடிக்கிறார்.
அதனை சின் சான் மற்றும் அவர்களது நண்பர்கள் எடுத்து வந்து வளர்க்கின்றனர். மறுபக்கம் அந்த டைனோசர் ஐ கடத்தி வந்த நபரும் தேடுகிறார் டைனோ தீம் பார்க் நபர்களும் தேடி வருகின்றனர். டைனோசரை கண்டு பிடித்தார்களா? டைனோசரால் ஷின் சான் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அந்த டினோசரை ஏன் கடத்தினர் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்திற்கு தமிழ் டப்பிங் செய்த அனைத்து குரல்களும் அவர்களது வேலையை திறம்பட செய்துள்ளனர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் இடம் பெற்ற வசனங்கள் அல்டிமேடாக அமைந்துள்ளது.
இயக்கம்
சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு கற்பனை கதைகளத்துடன் சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஷினொபு சசாகி. காமெடி காட்சிகள் இயக்கிய விதம் சிறப்பு. பல நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகியுள்ளது.
இசை
Toshiyuki Arakawa-ன் பின்னணி இசை ரசிக்கும் படி அமைந்துள்ளது.
தயாரிப்பு
Shin-Ei Animation நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











