என் மலர்


பரிவர்த்தனை
பிடிக்காத வாழ்க்கையை கடமைக்கு வாழும் தம்பதிகள் குறித்த கதை.
கதைக்களம்
சுவாதியும் ராஜேஸ்வரியும் கல்லூரித் தோழிகள். தற்போது சுவாதி திருமணம் செய்து கொண்டு கணவருடன் கடமைக்கு வாழ்ந்து வருகிறார். ராஜேஸ்வரி காதலித்த காதலனை எண்ணி திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இறுதியில் சுவாதி கணவருடன் விருப்பம் இல்லாமல் வாழ காரணம் என்ன? ராஜேஸ்வரியின் காதலர் யார்? எதற்கு திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் சுர்ஜித், இதுவரை சின்ன திரையில் நடித்துவந்த இவர் தற்போது இப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆகியிருக்கிறார். பிடிக்காத வாழ்க்கையை வாழும் கடுப்பான கணவனாக சுர்ஜித் கவர்ந்து இருக்கிறார்.
சுவாதி - ராஜேஸ்வரி இருவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாரதிமோகன், விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன், சுமேகா, ஹாசினி, ரயில் கார்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்குனர்
பிடிக்காத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிலர் மட்டுமே விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வரிசையாக நிற்கின்றனர். இந்த மனமாற்றத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணி பாரதி. சில காட்சிகள் எதார்த்தை மீறியதாக உள்ளது. வாழ்க்கை ஒருமுறை அதை பிடித்தவர்களுடன் வாழ்வது மட்டுமே வாழ்க்கை என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர்.
இசை
ரஷாந்த் அர்வின் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
கோகுலின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் சிட்டியும் சிறப்பாக உள்ளன.
படத்தொகுப்பு
ரோலக்ஸ் ஒளிப்பதிவு அருமை.
புரொடக்ஷன்
எம்.எஸ்.வி. புரொடக்ஷன்ஸ் ‘பரிவர்த்தனை’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.








