என் மலர்


பரமசிவன் பாத்திமா
மத மாற்றம் அதற்கு இருக்கும் பின்னணியை பேசும் திரைப்படம்.
கதைக்களம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று இந்து , முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மூன்று கிராமங்களாக பிரிந்து இருக்கிறது.
இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது.
இந்த கிராமத்தில் கிறிஸ்துவ மற்றும் இந்து மத பிரிவினர் யார் திருமணம் செய்ய நினைத்தாலும், அவர்கள் திருமணம் நாளுக்கு முன் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களை நாயகன் விமல் மற்றும் நாயகி சாயாதேவி இருவரும் திருமண கோலத்தில் இணைந்து கொலை செய்கிறார்கள்.
கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. விமலும், சாயாதேவியும் எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? ஏன் இவர்கள் திருமண கோலத்தில் கொலை செய்கின்றனர் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயா தேவியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் அதிகம் பேசுகிறார், அவர் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றும் மத மாற்றம் அதற்கு பின் இருக்கும் பின்புலத்தை பற்றி சொல்ல முயற்சி செய்துள்ளார்.
இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை அமைத்தது பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
இசை
தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை.
தயாரிப்பு
Lakshmi Creations நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










