என் மலர்


படிக்காத பக்கங்கள்
தங்கையின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கும் அக்காவின் கதை.
கதைக்களம்
நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் ஏற்காடுக்கு படப்பிடிப்புக்காக செல்கிறார். அங்குள்ள ஒரு பெரிய ஓட்டலில் தங்கி இருக்கும் நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் அவரை பேட்டி எடுக்க வருகிறார்.
இந்த பேட்டியின் போது தேவையில்லாத கேள்வியால் யாஷிகா ஆனந்த் கோபப்பட்டு நிருபரை அடித்துவிடுகிறார். இதனால் கோபமடையும் அந்த நிருபர் யாஷிகாவை தாக்கி கட்டி வைத்து துன்புறுத்துகிறார். மேலும், உன்னை அனுபவிக்க வேண்டும் என்று அவர் கேட்க, யாஷிகாவும் ஒப்புக்கொள்கிறார்.
இருவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் யாஷிகா, நிருபரை அடித்து கட்டி வைக்கிறார். மேலும், உன்னை திட்டமிட்டு வரவழைத்தேன் என்று நிருபரிடம் யாஷிகா கூறுகிறார்.
இறுதியில் நிருபரை யாஷிகா ஆனந்த் திட்டமிட்டு வரவழைக்க காரணம் என்ன? யாஷிகாவின் திட்டம் என்ன? உண்மையிலேயே அவர் நிருபரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த், யதார்த்தமாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகனாக நடித்திருக்கும் பிரஜன், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.
மற்ற நடிகர்களின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அனைவரும் சுமாரான நடித்து, செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வம் மாத்தப்பன். நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட, நாளிதழ்களில் பார்த்த செய்தியை படமாக்க முயற்சி செய்து இருக்கிறார். அடுத்தடுத்து யூகிக்க முடிந்த காட்சிகள் படத்திற்கு பலவீனம். இன்னும் சுவாரஸ்யமாகவும் அழுத்தமான காட்சிகள் வைத்திருந்தால் படத்தை ரசித்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டு இருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் டோலி லொகேஷன் பகுதிகளை இன்னும் அழகாக காண்பித்து இருக்கலாம்.
இசை
ஜெஸ்ஸி கிப்ட்டின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். எந்த பாடலும் மனதில் பதியவில்லை.
தயாரிப்பு
முத்துக்குமார் 'படிக்காத பக்கங்கள்' திரைப்படத்தை தயாரித்துள்ளார்









