என் மலர்


படை தலைவன்
தன்னுடைய தொலைந்துப்போன யானை குட்டியை தேடும் நாயகனின் கதை.
கதைக்களம்
வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் தனது வயிற்றில் பிறக்காத பிள்ளையாக நினைத்து வளர்க்கிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானையை நாயகன் சண்முக பாண்டியன் சகோதரனைப் போல் பார்த்துக் கொள்கிறார். அப்பா, தங்கை மற்றும் இந்த யானை குட்டியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நாயகன் சண்முகபாண்டியன்.
ஆனால் ஒரு கட்டத்தில் இந்த யானையை ஒரு மர்ம கும்பல் கடத்துகின்றனர். மறுபக்கம் ஒரு கூட்டம் சண்முகபாண்டியனை கொலை செய்வதற்கு தேடி வருகின்றனர். யானை எதற்காக கடத்தப்பட்டது? சண்முகபாண்டியனை கொலை செய்ய நினைக்கும் கும்பல் யார்? யானையை மீட்டாரா? என்படே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், தனது முந்தைய இரண்டு படங்களை விட, இதில் உடல் ரீதியாகவும் நடிப்பு ரீதியாகவும் மெனெகெடல் செய்திருப்பது தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். எமோஷனல் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, நாம் பலமுறை பார்த்த கதையை எந்தவிட திருப்பங்கள் இல்லாமல் மீண்டும் இயக்கியுள்ளது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் மூலம் சொல்லியிருப்பதால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இசை
இளையராஜா இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா கிராமத்து பகுதிகளை அழகாகவும், ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாகவும் படமாக்கியிருக்கிறது.
தயாரிப்பு
ஜெகநாதன் பரமசிவம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
good movie











