என் மலர்


ஒற்றைப் பனை மரம்
இலங்கை ஈழத்தில் கஷ்டப்பட்ட ஒரு பெண்ணின் கதை
கதைக்களம்
இக்கதைச்சூழல் இலங்கை ஈழத்தில் நடைப்பெறுகிறது. அங்கு கதாநாயகியான நவயுகா 2009இல் நடந்த போரில் சரணடைந்த பெண் போராளியாக இருக்கிறார். அதேப் போரில் தன் மனைவியை பறிகொடுத்த ராசைய்யா இருக்கிறார். இவருக்கு ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிறுமி இருக்கிறாள். அந்த போர் வாழ்க்கைக்கு பிறகு அகதிகள் முகாமில் இவர்கள் இருக்கின்றனர், சில வருடங்கள் அங்கேயே வாழ்கையை கழித்தப்பின்னர். புதியவன் ராசய்யா உடன் நவயுகா அவரின் சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்க தொடங்கிகிறார்கள்.
இந்த சொந்த ஊருக்கு வந்த பிறகும் நிம்மதி வாழ்க்கை வாழலாம் என நினைக்கின்றனர் ஆனால் அவர்களால் அது முடியவில்லை. சமூதாயம் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை . இந்நிலையில் கதைச்சூழல் இவ்வாறு நகருகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? பிழைப்பிற்காக நவயுகா மற்றும் புதியவன் ராசைய்யா என்ன செய்தனர்? உரிமைக்கான போராட்டம் என்னவாக இருக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இக்கதை மூன்று கதாப்பாத்திரத்தையே முதன்மையாக வைத்து நகர்கிறது. கதாநாயகியான நவயுகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதியவன் ராசைய்யா நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இயக்கம்
ஒரு ஆவண திரைப்பட பாணியில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் புதியவன் ராசைய்யா. தனி மனிதர்களையோ, தலைவர்களையோ, இலங்கை அரசையோ யாரயும் விமர்சிக்காமல் பொதுத்தன்மையில் இப்படத்தை இயக்கியுள்ளார். திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். இத்திரைப்படம் என்ன கூற வருகிறது என புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இசை
அஷ்வமித்ராவின் பின்னணி இசை சுமார் ரகம்
ஒளிப்பதிவு
மஹிந்தா மற்றும் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.
தயாரிப்பு
Rsss பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.







