என் மலர்tooltip icon
    < Back
    ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்  | Otha Votu Muthaiya Review in Tamil
    ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்  | Otha Votu Muthaiya Review in Tamil

    ஒத்த ஓட்டு முத்தையா

    இயக்குனர்: சாய் ராஜகோபால்
    ஒளிப்பதிவாளர்:எஸ்.ஏ.காத்தவராயன்
    இசை:சித்தார்த் விபின்
    வெளியீட்டு தேதி:2025-02-14
    Points:395

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை257251239
    Point1812104
    கரு

    தமிழக அரசியலில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக சித்தரித்து சொல்வதே ‘ஒத்த ஓட்டு முத்தையா’

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு ஓட்டை வாங்கியதால் ஊரில் அனைவரும் கவுண்டமணியை ஒத்த ஓட்டு முத்தையா என அழைக்கின்றனர். இவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். இவர்களை ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கவுண்டமணியின் ஆசை. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் கவுண்டமணியின் மூன்று தங்கைகளும் வெவ்வேறு நபர்களை காதலித்து வருகின்றனர். அண்ணன் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைப்பெற வேண்டும் என்ற எண்ணத்தால் அவர்களது காதலர்களை சகோதரர்கள் போல் நடிக்க திட்டமிடுகின்றனர்.

    மறுபக்கம் மீண்டும் தேர்தல் வருகிறது, இந்தமுறை தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என முழு மூச்சுடன் வேலை செய்து வருகிறார் கவுண்டமணி. தேர்தலில் வெற்றிப்பெற்றாரா? அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்களா ? என்படே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகனான கவுண்டமணி பல ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றுவது ரசைகர்களுக்கு விருந்து அளித்துள்ளது. வழக்கம் போல் அவரது நக்கலும் நய்யாண்டியும் கலந்த கலவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    அரசியல் கதைக்களத்துடன் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சாய் ராஜகோபால். கவுண்டமணியின் வசனங்கள் பல இடத்தில் வொர்க் ஆகவில்லை. யோகிபாபு மற்றும் கவுண்டமணி ஆகியோர் வரும் காட்சிகள் ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

    இசை

    சித்தார்த் விபினின் இசை கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    தயாரிப்பு

    Cine Craft Productions - Raviraaja ME நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×