என் மலர்tooltip icon
    < Back
    ஓஹோ எந்தன் பேபி திரைவிமர்சனம் | Oho Enthan Baby Review in tamil
    ஓஹோ எந்தன் பேபி திரைவிமர்சனம் | Oho Enthan Baby Review in tamil

    ஓஹோ எந்தன் பேபி

    இயக்குனர்: கிருஷ்ணகுமார் ராமகுமார்
    எடிட்டர்:ஆர்சி பிரணவ்
    ஒளிப்பதிவாளர்:ஹரிஷ் கண்ணன்
    இசை:ஜென் மார்ட்டின்
    வெளியீட்டு தேதி:2025-07-11
    Points:1566

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை189205248
    Point71482032
    கரு

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் நாயகன் ருத்ரா. இவருக்கு சினிமா ஹீரோ விஷ்ணு விஷால் இடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

    ருத்ரா ஆரம்பத்தில் சொல்லும் கதை விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, ஒரு காதல் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

    தன்னுடைய வாழ்க்கையில் பள்ளி, கல்லூரி காலத்தில் நடந்த காதல் கதையை சொல்லுகிறார். மேலும் தன்னுடைய காதல் முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார். இந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்து போக, நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். மேலும் ருத்ராவின் காதலியை சந்தித்துவிட்டு வர சொல்கிறார்.

    இறுதியில் ருத்ரா காதலியை சந்தித்தாரா? அவருடைய காதலி எதனால் அவரை பிரிந்தார் ருத்ராவின் இயக்குனர் கனவு நனவானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ருத்ரா, அறிமுக நடிகர் போல் இல்லாமல் எதார்த்தமாக நடித்துள்ளார். வெகுளி, காதல், ஏமாற்றம், பரிதவிப்பு என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருந்தது. நாயகியாக நடித்து இருக்கும் மிதிலா பால்கர் அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    சினிமா ஹீரோவாகவே, நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். தன் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை போன்ற விஷயங்களையும் திரையில் அப்படியே ஓபனாக பேசியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் அஞ்சு குரியன் அழகான பொம்மை போல் வந்து சென்றிருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் மிஷ்கின்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார். முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் போரடிக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கும் படி திரைக்கதை அமைந்து இருப்பது பலவீனம்.

    இசை

    ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா கலர்ஃபுல்லாக படம் பிடித்து இருக்கிறது.

    தயாரிப்பு

    Vishnu Vishal Studioz and Romeo Pictures நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×