என் மலர்tooltip icon
    < Back
    ஓ பட்டர்பிளை திரைவிமர்சனம் | Oh Butterfly Review in tamil
    ஓ பட்டர்பிளை திரைவிமர்சனம் | Oh Butterfly Review in tamil

    ஓ பட்டர்பிளை

    இயக்குனர்: விஜய் ரங்கநாதன்
    எடிட்டர்:புவனேஷ் மணிவண்ணன்
    இசை:வைசாக் சோமநாத்
    வெளியீட்டு தேதி:2026-03-06
    Points:10

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை733
    Point10
    கரு

    மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள் தற்செயலாகவே நடக்கின்றன என்பதை வைத்து உருவாகி இருக்கும் படம் ஓ பட்டர்ஃப்ளை.

    விமர்சனம்

    திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் குற்ற உணர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுவதற்கும் தானே காரணம் என்று எண்ணும் அவர், தற்கொலை முயற்சிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்.

    அந்த நேரத்தில், துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா அவரை ஆறுதல் கூறி உண்மையை புரிய வைக்க முயற்சிக்கிறார். அப்போது தனது திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் குறித்து பேசும் நிவேதிதா, தன் கணவரை தானே கொன்றதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

    நிவேதிதா சதீஷ் கணவரை கொன்றதாக சொல்ல காரணம் என்ன? அவரது கணவர் இறப்பின் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ், பலமான கதாபாத்திரம் இருந்தும் தனது நடிப்பில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காதலன் மற்றும் கணவர் இடையே சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    ஆனால், உண்மை வெளிவரும் முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்த வேண்டிய பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் குறைவாக இருப்பதால் அந்த காட்சிகளின் தாக்கம் குறைந்து விடுகிறது.

    நிவேதிதாவின் முன்னாள் காதலனாக சிபி சந்திரன் மற்றும் கணவராக அதுல் நடித்துள்ளனர். இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவில் நடித்துள்ளனர். குறிப்பாக அதுல், அதிகமாக நடிக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.

    சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் நாசர் படத்தில் கவனம் ஈர்க்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி அமைதியான நடிப்பால் கதைக்கு தேவையான சமநிலையை தருகிறார்.

    இயக்கம்

    மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள் தற்செயலாகவே நடக்கின்றன என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன். ஆனால், அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லாமல், மிகவும் மெதுவாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

    இசை

    வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், கதையில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×