என் மலர்tooltip icon
    < Back
    ஆஃபிசர் ஆன் டியூட்டி  திரைவிமர்சனம்  | Officer on Duty Review in Tamil
    ஆஃபிசர் ஆன் டியூட்டி  திரைவிமர்சனம்  | Officer on Duty Review in Tamil

    ஆஃபிசர்

    இயக்குனர்: ஜித்து அஷ்ரஃப்
    எடிட்டர்:சமன் சாக்கோ
    ஒளிப்பதிவாளர்:ராபி வர்கீஸ் ராஜ்
    இசை:ஜேக்ஸ் பிஜாய்
    வெளியீட்டு தேதி:2025-03-14
    Points:646

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை299304
    Point300346
    கரு

    நகை திருட்டு மற்றூம் அதன் பின்னணி வழக்கை விசாரிக்கும் குஞ்சாகோ போபனின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    படத்தின் நாயகனான குஞ்சாகோ போபன் சில சூழ்நிலை காரணமாக உயர் காவல் அதிகாரியாக இருந்தவர் CI பதவிக்கு டீப்ரோமோட் ஆகிறார். அப்பொழுது அவருக்கு முதல் நாள் ஒரு நகை திருட்டு வழக்கை எடுத்து விசாரிக்கிறார். திருட்டு நகை தொடர்பான அந்த நகைக்கடை சென்று விசாரிக்கிறார். அப்போது இந்த நகையுடன் இன்னும் சில நகைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    அதை விசாரிக்க குஞ்சாகோ போபனுக்கு பல மர்மங்கள் நிறைந்த விஷயம் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்கிறது. இந்த நகை திருட்டிற்கு பின்னுள்ள மர்மம் என்ன? இந்த மர்மங்களுக்கும் குஞ்சாகோ போபனுக்கு என்ன தொடர்பு?

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயனாக நடித்து இருக்கும் குஞ்சாகோ போபன் ஒரு மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார். திரைப்படம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஒரு சீரியசான முகபாவனையோடே இருக்கிறார். நகை விற்க செல்லும்  ஜெகதீஷ் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

    விஷாக் நாயர் மற்றும் அவரது கூட்டாளிகள் நடிப்பில் மிரட்டியுள்ளனர். கதாநாயகியாக நடித்து இருக்கும் பிரியாமணி அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இயக்கம்

    ஒரு நகை திருட்டு வழக்கு அதற்கு பின் உள்ள பின்னணிய மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ஜித்து அஷ்ரஃப். திரைக்கதை படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது. அடுதென்ன அடுதென்ன என்பதை பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது பெரிய பலம். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் திரைப்படம் இன்னும் ரசிக்கும் தன்மையோடு இருந்திருக்கும்.

    ஒளிப்பதிவு

    ராபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    இசை

    ஜேக்ஸ் பிஜாய் - ன் பின்னணி இசை படத்தின் திரையோட்டதிற்கு பெரிதும் உதவியுள்ளது.

    தயாரிப்பு

    Prakkat Films நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×