என் மலர்


நரிவேட்டை
பழங்குடி இன மக்களுக்காக போராடும் கதாநாயகனின் கதை.
கதைக்களம்
படத்தின் தொடக்கத்தில் காட்டில் வாழும் ஒரு பழங்குடியின மக்கள் தங்களின் இருப்பிடத்தற்காக போராட்டம் செய்து வருகின்றனர். மறுப்பக்கம் டொவினோ தாமஸ் பல வேலைகளை கிடைத்தும் அதனை தட்டி கழித்துவிட்டு ஊதாரித்தனமாக இருக்கிறார். செய்தால் உயர் பதிவியில் உள்ள வேலை மட்டுமே பார்ப்பேன் என்ற குறிக்கோள் உடன் இருக்கிறார். ஆனால் இந்த வேலை இல்லாத காரணத்தினாலே காதல் மற்றும் சுற்று வட்டாரங்கள் இவரை கேலி செய்ய வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபில் வேலையில் சேர்கிறார்.
அடுத்ததாக மலைவாழ் மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் குழுவில் டொவினோ சேர்கிறார். அந்த இடத்திற்கு சென்ற டொவினோ வாழ்க்கையை மாற்றும் பல சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த இடத்திலிருந்து டொவினோ எப்படி மீண்டார்? அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைத்ததா? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
காவல் அதிகாரியாக கச்சிதமாக நடித்துள்ளார் டொவினோ தாமஸ். அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரமாக இப்படம் இருக்கும். மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார் சேரன். அவரது வில்லன் கலந்த நடிப்பு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சுராஜ் அவரது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
இயக்கம்
அரசாங்கம் சொல்லும் அடியாட்களாக போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார், இந்த நீதித்துறை எப்படி நிலையற்று இருக்கிறது மற்றும் இந்த சிஸ்டம் எப்படி செயல்படுகிறது போன்ற உண்மையை இப்படத்தின் மூலம் தைரியமாக எடுத்துரைத்துள்ளனர். படத்தின் முதல் பாதி சிறு தொய்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் இடம் பெற்ற காதல், பாட்டு என அனைத்தும் கதைக்கு தேவையில்லை என தோன்ற வைக்கிறது. படத்தின் கடைசி 30 நிமிடம் பாராட்டிற்குரியவை.
இசை
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
விஜயின் ஒளிப்பதிவை ரசிக்குபடியாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Indian Cinema Company நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










