என் மலர்


நண்பன் ஒருவன் வந்த பிறகு
நண்பர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் ஈவண்ட் மேனேஜ்மண்ட்பற்றிய கதை
கதைக்களம்
கதாநாயகனான ஆனந்த் ராம் சிறு வயதிலிருந்து ஆனந்தம் காலனியில் வசித்து வருகிறார். அந்த காலனியில் வசிக்கும் மற்ற சிறுவர்கள் அனைவரும் நண்பர்களாக ஒரே கேங்காக இருக்கின்றனர். ஆனந்துக்கு திரைத்துறையில் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே கனவு ஆனால் பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்கிறார்.
சிறு வயதில் ஒரே கேங்காக இருந்த நண்பர்கள் வளர்ந்த பின் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து பின் பல்வேறு இடங்களில் வேலைகளுக்கு செல்கின்றனர். பின் ஒரு கட்டத்தில் ஆனந்த் ஏன் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொழிலை செய்யக்கூடாது என NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியை தொடங்குகிறார்கள். மற்ற ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியை விட அவர்களது கம்பெனி வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக ஆனந்த ராம் கண்டுபிடித்த Become a Star என்ற ஆப் மூலம் வித்தியாசமான ஒரு டிரெண்டை பின்பற்றுகிறார். அதன் பிறகு ஒரு இரண்டு ஈவண்ட் எடுத்தப்பின் இவர்கள் நினைத்தது போன்று அமையவில்லை, இதனால் நண்பர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
நண்பர்களால் சேர்ந்து துவங்கப்பட்ட இந்த NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட் வெற்றி பெற்றதா? இதனால் என்னென்ன பிரச்சனையை சந்தித்தார்கள்? மீண்டும் நண்பர்கள் இணைந்தார்களா? ஆனந்தின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்து இருக்கும் ஆனந்த் ராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களாக நடித்து இருக்கு ஆர்ஜே விஜய், வினோத், பாலா, இர்ஃபான், என அனைவரும் அவரது பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.
அப்பாவாக நடித்து இருக்கும் குமரவேல் அவருக்கான எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகியாக நடித்து இருக்கும் பவானி ஸ்ரீ கொடுத்த வேலையை தெளிவாக செய்துள்ளார்.
இயக்கம்
ஒரு மாடர்னான கதைக்களத்தில் நட்பு மற்றும் காதல் கதையை கூற முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஆனந்த்ராம். படம் முதல் பாதி நன்றாக காட்சிகள் அமைந்து இருந்தாலும், அது இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் நேர அளவையும் இன்னும் குறைத்து இருந்தால் இன்னும் ரசிக்கும்ப்படியாக அமைத்து இருக்கும்.
ஒளிப்பதிவு
தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு தெளிவாகவுள்ளது, பாடல் காட்சிகளை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார்
இசை
காஷிஃபின் இசை கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
தயாரிப்பு
மசாலா பாப்கார்ன் மற்றும் WFS ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.











