என் மலர்tooltip icon
    < Back
    நாங்கள் திரைவிமர்சனம்  | Naangal Review in Tamil
    நாங்கள் திரைவிமர்சனம்  | Naangal Review in Tamil

    நாங்கள்

    இயக்குனர்: அவினாஷ் பிரகாஷ்
    எடிட்டர்:அவினாஷ் பிரகாஷ்
    ஒளிப்பதிவாளர்:அவினாஷ் பிரகாஷ்
    இசை:வேத் சங்கர் சுகவனம்
    வெளியீட்டு தேதி:2025-04-18
    Points:30

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை606
    Point30
    கரு

    தாய் இல்லாமல் தந்தை வளர்ப்பில் வளரும் மூன்று மகன்களின் கதை

    விமர்சனம்

    கதைக்கரு

    இக்கதைக்களம் 1992 - 2000 காலக்கட்டத்திற்குள் நடப்பது போன்று காட்சிபடுத்தப்பட்டபட்டுள்ளது. கதாநாயகனான அப்துல் ஊட்டியில் ஒரு கான்வெண்ட் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். மனைவியை பிரிந்து வாழும் இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதால் வீட்டில் தன் மகன்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துக் கொண்டு மகன்களை வளர்க்கிறார். தான் சொன்ன வேலையை சரியாக செய்யவில்லை என்றால் அதற்கான தண்டனையை வழங்குகிறார். ஒரு கட்டத்தில் அப்துல் மிகவும் வெறுமை மற்றும் தனிமையில் அவதி படுகிறார். இவர் வளர்ப்பில் இருக்கும் மகன்களும் சந்தோஷமாக இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? இவர் மனைவியை விட்டு பிரிவதற்கு காரணம் என்ன? இவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    தந்தையாக நடித்து இருக்கும் அப்துல் ரபே சிறப்பான மற்றும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகன்களிடம் கண்டிப்பாக இருந்தாலும் சில காட்சிகளில் நகைச்சுவை கலந்த வில்லன் போல் காட்சியளிக்கிறார். மகன்களாக நடித்து இருக்கும் மிதுன், ரித்விக் மற்றும் நிதின் சுட்டித்தனமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். அப்பாவிடம் மாட்டிக்கொள்ள கூடாது என செய்யும் காட்சிகளில் பார்வையாளர்களின் மந்தில் பதிகின்றனர்.

    ப்ரார்தனா ஶ்ரீகாந்த், ராக்சி, ஜான் , தனிகா, குருபிரசாத் மற்றூம் கஹரிஹரன் அவர்களக்கு கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

    இயக்கம்

    தனிமை மற்றும் வெறுமையில் வாழும் தந்தை அவரின் மகன்கள் அவரது வாழ்வியல் சூழலை அழகாக ஆவணப்படுத்தியுள்ளார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ். சோகமான காட்சிகளை பிளாக் அண்ட் ஒயிட்டிலும் , சந்தோஷமான காட்சியை கலர்புல்லாக காண்பித்தது சிறப்பு. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசிக்கப்பட்டிதருக்கும்.

    ஒளிப்பதிவு

    1992 - 2000 காலகட்டத்தை போல் மிகவும் எதார்த்தமாக பதிவுசெய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அவினாஷ் பிரகாஷ். இரவு காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படம்பிடித்துள்ளார். இவரது ஒளிப்பதிவு கதையோட்டத்திற்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

    இசை

    வேத் ஷங்கர்சுகவனம் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    இப்படத்தை GVS Raju (Kala Bhavashri Creations) நிறுவனம் தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×