என் மலர்


மையல்
வயிற்று பிழப்புக்காக திருடும் ஒரு சாமனிய மனிதனை எப்படி போலீசாரால் கொலை குற்றவாளியாக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதை
கதைக்களம்
கதாநாயகன் சேது இரவு நேரத்தில் ஆடு திருடி விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். ஒரு நாள் அப்படி ஆடு திருடும் போது கிராம மக்கள் சேதுவை துரத்துகின்றனர். அவர்களுக்கு பயந்து ஓடி செல்லும் போது கிணற்றுக்குள் குதித்து காலை முறித்துக் கொள்கிறார். மறுபக்கம் கிராம மக்களால் ஒதுக்கப்பட்டு காட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர் மந்திர கிழவியும் அவரது பேத்தியான சம்ரிதி தாராவும்.
கிணற்றில் விழுந்த சேதுவை ஊர் மக்களுக்கு தெரியாமல் மந்திர கிழவி வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை பார்க்கின்றனர். இதனால் சேதுவும் சம்ரிதி தாராவும் காதலில் விழுகின்றனர். மறுபக்கம் தேனப்பன் ஊரில் அவருக்கு வேண்டாத ஒரு நபரை கொலை செய்து விடுகிறார். இந்த வழக்கை காவல் அதிகாரியான டி.ஆர் பாலு விசாரிக்கிறார். தேனப்பன் காவல் அதிகாரியிடம் பணம் கொடுத்து கொலை வழக்கை வேறொரு நபரை கைது செய்ய சொல்கிறார்.
இதனால் காவல் அதிகாரி கதாநாயகன் சேதுவை இதில் கோர்த்துவிட்டு விடலாம் எண்ணி அவரை தேடி வருகிறார். இதனை தெரிந்துக் கொண்ட சேது ஊரை விட்டு தப்பிச்செல்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? காவல் அதிகாரி சேதுவை பிடித்தாரா? தேனப்பனின் சதி திட்டம் வொர்க் அவுட் ஆனதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்துள்ள சேது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக நடித்துள்ள சம்ரிதி தாரா அழகாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
வில்லனாக நடித்து இருக்கும் பி.எஸ் தேனப்பன் அவரது பாணியில் வில்லத்தனத்தை காட்டி நடித்துள்ளார். மேலும் ஆர்.பி பாலா, சூப்பர் குட் சுப்பிரமணி, மந்திர கிழவியாக நடித்து இருக்கும் ரத்ன கலா கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
வயிற்று பிழப்புக்காக திருடும் ஒரு சாமனிய மனிதனை எப்படி போலீசாரால் கொலை குற்றவாளியாக்கப்படுகிறார்கள் என்ற மையத்தை வைத்து படத்தை இயக்கியுள்ளார் ஏழுமலை. படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இசை
அமர்கீத் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
Icon cine creations LLP நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









