என் மலர்


முதல் காதல் மரியாதை
காதலா கனவா என்று போராடும் கதாநாயகனின் கதை
கதைக்களம்
கதாநாயகனான தினேஷ் தேஜ் ஒரு ஊரில் வாழ்ந்து கல்லூரி படித்து வருகிறார். வழக்கம் போல கல்லூரி இளைஞராக ஜாலியாக நண்பர்களுடன் வாழ்க்கையை எஞ்சாய் செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஊரில் உள்ள கதாநாயகியான பாயல் ராதாகிருஷ்ணனனை காதலிக்கிறார். தினேஷ்- க்கு திரைத்துறையில் ஒரு பெரிய இயக்குனராக வேண்டும் என்பது கனவு. ஒரு கட்டத்தில் தினேஷ் காதலிக்கும் பெண்ணான பாயலை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்றால் அவரது கனவான சினிமாவை விட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. தினேஷ் தேஜ் என்ன செய்தார் அவரது காதலை அடைந்தாரா? காதலுக்காக கனவை தொலைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்த தினேஷ் அவரது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்கும் ஹீபா படேல் மற்றும் பாயல் ராதாகிருஷ்ணா கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
காதல், கனவு, நட்பு என அனைத்தயும் கலந்த ஒரு கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் மாரேஷ் சிவன். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சி அமைப்பில் சில இடங்களில் பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது.
ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவை மிகவும் கலர்ஃபுல்லாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரு
இசை
சுபாஷ் ஆனந்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம்.
தயாரிப்பு
பவானி மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.









