என் மலர்


மிஸ் யூ
ஒரு வித்தியாசமான காதல் கதையாக அமைந்து இருக்கும் திரைப்படம்
கதைக்களம்
சினிமா துறையில் இயக்குனராக முயற்சித்து வருகிறார் கதாநாயகன் சித்தார்த். இவருக்கும் ஒரு அமைச்சருக்கும் இடையே பிரச்சனை உருவாகிறது. இதனால் கதாநாயகன் சித்தார்த்திற்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தின் மூலம் சித்தார்த்திற்கு உடல் மற்றும் மன ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டப்பின் திடீர் நண்பரான கருணாகரன் நட்பு ஏற்படுகிறது. அவருடன் பெங்களூருக்கு சென்று வசிக்கிறார் சித்தார்த். அப்பொழுது கதாநாயகியான ஆஷிகாவை சந்திக்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார். ஆஷிகாவிடம் காதலை கூறுகிறார். ஆனால் சித்தார்த்தை சம்மதிக்க ஆஷிகா தயங்குகிறார்.
அதன் பிறகு ஆஷிகாவின் புகைப்படத்தை தன் அம்மாவிடம் காண்பித்து இவள் தான் உன்னுடைய மருமகள் என கூறுகிறார். ஆஷிகாவின் புகைப்படத்தை பார்த்ததும் அவர் பெரும் அதிர்ச்சியாகிறார். இவரின் இந்த பேரசிர்ச்சிக்கு காரணம் என்ன ? அமைச்சருக்கும் சித்தார்த்திற்கும் என்ன பிரச்சனை? ஆஷிகா இவரது காதலை ஏற்றுக்கொண்டாரா? சித்தார்த்திற்கு உடல் ரீதியாக எனன பிரச்சனைகள் ஏற்பட்டது ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான சித்தார்த் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியான ஆஷிகாவும் முதல் பாதியில் பயந்த சுபாவமாக நடித்து அதற்கு பிறகு முதிர்ச்சியான நடிப்பை வித்தியாசம் காண்பித்து அழகான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நண்பர்களாக வரும் கருணாகரன், பால சரவணன் மற்றும் லொள்ளு சபா மாறன் கொடுத்த வேலையை திறமையாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஒரு புதுவிதமான காதல் கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். திரைக்கதையின் முதல் பாதி சில குறைகள் இருந்தாலும். அதை இரண்டாம் பாதியில் சரி செய்துள்ளார் இயக்குனர்.
இசை
ஜிப்ரானின் பின்னணி இசை கைகொடுத்த அளவுக்கு பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கே.ஜி. வெங்கடேஷ் காதல் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார்.
தயாரிப்பு
7 MILES PER SECOND தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










