என் மலர்


மீஷா
நட்பை கருவாக வைத்துக்கொண்டு திரைக்கதையில் சமூக அரசியல் பேசியிருக்கும் படமாக உருவாகியுள்ளது
கதைக்களம்
வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். வளர்ந்த பிறகு கதிர் ஒரு வனத்துறை அதிகாரியாக இருக்கிறார். அப்பொழுது தன் நீண்ட கால நெருங்கிய நண்பனான ஹக்கிம் ஷாவிற்கு தொடர்பு கொண்டு மான் கறி கிடைத்துள்ளது அனைவரும் கிளம்பி வாருங்கள் என நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். பல வருடங்களாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பேசாமல் இருந்த கதிர் திடீர் என அழைப்பு விடுத்தததும் அனைவருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த நண்பர்கள் பழைய முன்பகையை நினைவில் வைத்துக் கொண்டு கதிரை சந்திக்க வருகின்றனர். நண்பர்கள் சந்தித்த பின் என்ன ஆனது? இவர்களுக்கு இருக்கும் முன்பகை என்ன? இதற்கு பின்னாடி இருக்கும் அரசியல் என்ன அன்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் கதிர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றின் மூலம் மிதுன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார்.கதிரின் நண்பராக மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷா, அளவாக நடித்திருந்தாலும், எக்ஸ்பிரஷன் மூலமாகவே தனது உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வேட்டைக்காரராக நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ, சுதி கொப்பா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் ஜியோ பேபி ஆகியோரது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இயக்கம்
நட்பை கருவாக வைத்துக்கொண்டு திரைக்கதையில் சமூக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் எம்சி ஜோசப், உடன் இருப்பவர்களின் துரோகங்களினால் தான் மக்கள் தலைவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
வனப்பகுதி பயணம் மற்றும் அரசியல் பயணம் என்று முதல் பாதி படம் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் அதே விறுவிறுப்பு இல்லை என்பது பார்வையாளர்களின் வருத்தம்.
இசை
இசையமைப்பாளர் சூரஜ் எஸ்.குரூப், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். இவரது இசை படத்தின் பெரிய பலம் வித்தியாசமான சப்தங்கள் மூலம் வனப்பகுதி காட்சிகளில் பார்வையாளர்களை மிரள செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜன், வனப்பகுதி அழகை மட்டும் இன்றி அங்கு மறைந்திருக்கும் ஆபத்துகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.







