என் மலர்


மீலாதுன் நபி
நபிகளின் வாழ்க்கை, கொள்கைகள் பற்றிய படமாக மீலாதுன் நபி உருவாகி உள்ளது.
நபிகளின் வாழ்க்கை, கொள்கைகள் பற்றிய படமாக மீலாதுன் நபி உருவாகி உள்ளது.
நபிகளின் கதையை இமாம் அப்துல் கையூம், இமாம் உமர், இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் திரையில் தோன்றிக் கூறுகிறார்கள். ஏழைகள் பசித்திருக்க நாம் உண்ணக் கூடாது. 5 வேளை தொழுகை நடத்த வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். வட்டி வாங்க கூடாது. தடை செய்யப்பட்ட மது, போதை மருந்து, விபசாரம் கூடாது. தந்தை, மகன் சண்டை இருக்க கூடாது. மனைவிக்கு சமஉரிமை கொடுக்க வேண்டும்.
இஸ்லாம் யாரையும் மதத்தை தழுவ வேண்டும் என்று நிர்பந்திப்பதில்லை. எந்த மதமும் உயர்வு, தாழ்வு என்று பார்க்க கூடாது போன்ற போதனைகள் கூறப்படுகின்றன. நபிகளின் உருவத்தையும் தோற்றத்தையும் படத்தில் காண்பிக்க விட்டாலும் அவர் பிறந்தது, வளர்ந்தது சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் மெக்கா பயணம் பற்றி படத்தில் பேசப்பட்டு உள்ளது.
நடிகர்கள்
இமாம் அப்துல் கையூம், இமாம் உமர், இமாம் சதக்கத்துல்லா, கதாநாயகி ரஹீமா பேகம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
நபிகள் நாயகம் வாழ்க்கை படத்தை கதை, வசனம், பாடல்கள் எழுதி செயற்கை நுண்ணறிவு காட்சிகளுடன் வடிவமைத்து மதம் மற்றும் அதன் இறைதூதர் பற்றிய டாக்குமெண்டரி படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மில்லத் அகமது. இஸ்லாமியருக்குத் தங்கள் மதத்தைப் பற்றிய கூடுதல் புரிதல் ஏற்படவும், பிற மதத்தினருக்கு இஸ்லாம் குறித்த எளிய அறிமுகம் பெறவும் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அதிக ஏஐ காட்சிகளாக இடம் பெற்று இருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒளிப்பதிவு
லலித் ராகவேந்தர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
இசை
எஸ்.ஆர்.ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.








