என் மலர்


மாயன்
உலகம் அழியப் போவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும்
கதைக்களம்
ஐடி துறையில் பணியாற்றி வருகிறார் கதாநாயகன் வினோத் மோகன். இவருக்கு தன் அம்மாவுக்காக ஒரு சொந்த வீடு வாங்குவதை நோக்கமாக வைத்து உழைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் நாயகனுக்கு வரும் மின்னஞ்சல் வருகிறது அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது. என தகவல் இருக்கிறது. நீ மாயர்களில் பிள்ளை என்பதால் இதை தெரியப்படுத்திகிறோம் என இருக்கிறது. இதை முதலில் நம்ப மறுப்பவர் பின் சில மர்மமான விஷயங்கள் நடப்பதை தொடர்ந்து இச்செய்தியை நம்புகிறார். பின் உலகம் அழியத்தான் போகிறது என தன் அம்மாக்காக வங்கியில் கடனை வாங்கி வீட்டை வாங்குகிறார். தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார். அப்பொழுது காவல் அதிகாரியான ஜான் விஜயுடன் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? மாயர்கள் கூறியதுப்போல் உலகம் 13 நாட்களில் அழிந்ததா? யார் இந்த மாயர்கள்? மாயர்களுக்கு கதாநாயகனுக்கும் என்ன தொடர்பு.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் வினோத் மோகன், ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், அவரை ஆக்ஷன் ஹீரோவாக காட்டாமல் ஆன்மீகத்தன்மையோடு காட்டியிருக்கிறார்கள். முகம் முழுவதும் தாடியை வைத்துக்கொண்டு நடித்திருப்பதால், அவருடைய எக்ஸ்பிரஷன்கள் எதுவும் தெரியாமல் போகிறது. ’
குறைந்த காட்சிகளிலே வந்து போகிறார் பிந்து மாதவி. ஜான் விஜய், சாய் தீனா, ராஜ சிம்மன் ஆகியோர் அவர்களது வழக்கமான வில்லத்தனத்தை காண்பித்துள்ளனர்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணா, எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு அமைத்திருக்கும் திரைக்கதை ஆரம்பத்திலேயே படத்தை புரியாத புதிராக்கி விடுகிறது. பிறகு மாயவர்கள், ஆதிசிவன், அவ்வபோது நாயகனை துரத்தும் பாம்பு என்று பல விசயங்களை திரையில் காட்டியிருந்தாலும், அவை அனைத்தும் திரைக்கதைக்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை.
படமாக்கப்பட்ட காட்சிகளை விட, கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் அதிகமாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை இயக்குநர் திரைக்கதை மற்றும் கதை சொல்லலுக்கு கொடுத்திருந்தால் வித்தியாசமான ஒரு கமர்ஷியல் ஃபேண்டஸி படத்தை கொடுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத் ஓரளவுக்கு கொடுத்த வேலையை செய்ய முயற்சித்துள்ளார்.
இசை
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் கதைக்கு ஏற்ப பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பு
ராஜேஷ் கண்ணா இப்படத்தை தயாரித்துள்ளார்











