என் மலர்


மார்டின்
நினைவுகளை இழந்த ஒருவனின் போராட்ட கதை
கதைக்களம்
கதாநாயகனான துருவ சர்ஜா படத்தின் தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பலுடன் சண்டை போடுகிறார். அதில் துருவ சர்ஜா கடுமையாக தாக்கப்படுகிறார். அவரை சிகிச்சைக்காக அழைத்துச்செல்லும் போது மருத்துவரிடம் ஒரு மர்ம நபர் துருவ சர்ஜாவின் நினைவுகளை அழித்துவிடுமாறு கூறுகிறான். நினைவுகளை அழித்தப்பிறகு துருவ சர்ஜாவை பாகிஸ்தான் சிறையில் அடைக்கின்றனர்.
தன்னுடைய நினைவுகளை இழந்த பிறகு துருவ சர்ஜா அந்த சிறையில் இருந்து தப்பித்து, தான் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார். அப்பொழுது தன்னுடைய பெயர் அர்ஜூன் என தெரிய வருகிறது. மார்டின் என்ற நபரை பிடிக்கத்தான் பாகிஸ்தான் வந்தோம் என்ற செய்தி அவருக்கு தெரியவருகிறது.
துருவ சர்ஜா தன்னை யார் என கண்டுப்பிடித்தாரா? இவர் ஏன் பாகிஸ்தானில் இருக்கிறார்? மார்ட்டின் ஏன் இவரை பழிவாங்க துடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துருவ சர்ஜா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கதாப்பாத்திரத்தில் சாதுவாக அமைதியாக அலட்டாமல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மார்ட்டின் கதாப்பாத்திரத்தில் மிகவும் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். வைபவி ஷண்டில்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சிக்கனா தனது வழக்கமான நகைச்சுவை ஆளுமைக்கு மாறாக தீவிரமான பாத்திரத்தை வழங்கியுள்ளார். அன்வேஷி ஜெயின் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
ஒரு ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக இயக்கியுள்ளார் ஏ.பி அர்ஜூன் . திரைப்படத்தில் சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. சண்டை இருந்தளவுக்கு படத்தில் திரைக்கதை வலுவாக இருந்திருக்கலாம். படத்தில் பன்ச் டயலாக்குகளும் சண்டைகளும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
இசை
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கும் திரைக்கதைக்கும் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
சத்யா ஹெக்டே திறமையான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை முடிந்தவரை சுவாரசியமாக்க முயற்சித்துள்ளார்.
தயாரிப்பு
உதய் கே மேத்தா மற்றும் சுரஜ் உதம் மேத்தா இணைந்து மார்ட்டின் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.








