என் மலர்


மார்கோ
தம்பியை கொன்றவர்களை பழிவாங்கும் அண்ணனின் கதை
கதைக்களம்
தங்க கடத்தல் மற்றும் சமூகத்திற்கு விரோதமான செயலில் ஈடுப்பட்டு வருகிறது மார்கோவின் குடும்பம். மார்கோவின் அண்ணன் மற்றும் மார்கோ இதில் முன்னணி வியாபாரங்களை டீல் செய்து வருகின்றனர். மார்கோ மிகவும் மூர்கத்தன்மை மற்றும் கோபத்தன்மையுடவன். அதேப் போல் ஒரு நாள் வேறொரு கடத்தல் கும்பல் மார்கோவின் தம்பியை ஏதோ ஒரு காரணத்திற்காக கொன்றுவிடுகிறார்கள். இதனை தெரிந்துக் கொண்ட மார்கோ அந்த கும்பலை தேடி வருகிறார். யார் மார்கோவின் தம்பியை கொன்றனர்? எதர்காக கொன்றனர்? மார்கோ எப்படி அவர்களை தேடி பழிவாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மார்கோ கதாப்பாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். கோபம், ஆக்ரோஷம், வெறி என பித்து பிடித்தவன் போல் நடிப்பில் மிரட்டியுள்ளார் உன்னி முகுந்தன். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். ஒற்றை ஆளாக படத்தை தன் தோளில் சுமந்துள்ளார். பிற நடிகர்கள் அவர்களுக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
ஆங்கிலப்படமான ஜான் விக்கை பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹனீஃப் அதெனி. ஒவ்வொரு சண்டை காட்சிகளில் சிரத்தை வெளிப்படுத்தி கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் இந்த உழைப்பை கொஞ்சம் கதை அமைப்பிலும் செலுத்திருக்கலாம். ஆக்ஷன் காட்சிகள் மட்டும் தான் படத்தில் நிரம்பி வழிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
சந்துரு செல்வராஜ் -இன் ஒளிப்பதிவு அட்டகாசம். ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் தரத்தை பதிவு செய்துள்ளார்.
இசை
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
தயாரிப்பு
க்யூப்ஸ் எண்டெர்டெயின்ம்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









