என் மலர்


மதுரை 16
நண்பனுக்காக பழிக்கு பழிவாங்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
கதைக்களம்
மதுரை மீன் மார்கெட்டில் வேலை பார்த்து வரும் நண்பர்கள் 2 பேர், அந்த ஊர் எம்எல்ஏ - வை கொலை செய்வதற்கு திட்டம் போடுகிறார்கள். அதன்படி ஒரு நாள் எம்எல்ஏ- வை இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள். இந்த வழக்கை சென்னையில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இரண்டு பேரையும் போலீஸ் அதிகாரி கண்டு பிடித்து விடுகிறார். அவர்களை பிடிக்கும் சமயத்தில் நண்பர்கள் போலீஸ் அதிகாரியை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் நண்பர்கள் எம்எல்ஏ வை கொலை செய்ய காரணம் என்ன? போலீஸ் பிடியில் இருந்து நண்பர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகர்களாக நடித்து இருக்கும் ஜெரோம் விஜய் சண்டை காட்சியிலும், ரிஷி நண்பனுக்காக வருந்தும் காட்சியிலும், துருவன் இடைவேளை காட்சியிலும், விமல் ராஜ் சித்திரவதை காட்சியிலும் கவனிக்க வைத்து இருக்கிறார்கள். நாயகி நிவேதாவுக்கு அதிகம் வேலை இல்லை. எம்.எல்.ஏ மற்றும் போலீஸ் அதிகாரி இருவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
நண்பனுக்காக பழிக்கு பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜான் தாமஸ். பழைய கதை தூசி தட்டி கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி எடுத்து இருக்கிறார். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் நடந்த சுவாதி கொலை வழக்கை ஞாபகப்படுத்தி இருக்கிறார். பணமும் அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என்று இருக்கும் நபர்களை நண்பனுக்காக பழிவாங்குவதை திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்து இருந்தால் ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ரிஸ்வான் கானின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
இசை
சந்தோஷ் ஆறுமுகத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தயாரிப்பு
JS Film நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









