search icon
என் மலர்tooltip icon
    < Back
    Maaveeran
    Maaveeran

    மாவீரன்

    இயக்குனர்: மடோன் அஸ்வின்
    எடிட்டர்:பிலோமின் ராஜ்
    ஒளிப்பதிவாளர்:வித்து அய்யன்னா
    இசை:பரத் சங்கர்
    வெளியீட்டு தேதி:2023-07-14
    Points:5994

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை3828282717
    Point149027091153410232
    கரு

    கோழையாக இருக்கும் நபர் ஆக்‌ஷனில் இறங்கினால் என்ன நடக்கும் என்பது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சிவகார்த்திகேயன் தனது தாய் மற்றும் தங்கையுடன் குப்பத்தில் வசித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ஓவியர். ஒரு நாள் தாங்கள் வசிக்கும் குப்பைக்கிடங்கை காலி செய்யுமாறு அரசிடம் இருந்து அவர்களுக்கு நோட்டீஸ் வருகிறது.

    குப்பைக் கிடங்கை காலி செய்த மக்கள், குடிசை மாற்று வாரியம் வழங்கிய வீட்டு வசதி வாரிய வீட்டுக்குச் சிறிதும் யோசிக்காமல் செல்கின்றனர். அங்கு சென்றால் வீட்டு வசதி வாரிய வீடு குப்பட்டாவாசிகளின் சொர்க்க பூமியாக மாறிவிடுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வீடு தரமானதாக இல்லை என்பதை உணர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

    இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் சிவகார்த்திகேயன் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போடுகிறது.

    இறுதியில், சிவகார்த்திகேயன் பிரச்சினைகளை சரி செய்தாரா? அந்த குரல் யாருடையது? அந்த குரலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சிவகார்த்திகேயன் தன் நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். கோழையாக இருக்கும் ஒருவர் மாவீரனாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியில் காமெடி கலந்த ஆக்‌ஷனை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.

    கதாநாயகியான அதிதி சங்கர் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். யோகிபாபு தன் நகைச்சுவையினால் அதகளம் செய்துள்ளார். சிவகார்த்திகேயன், யோகிபாபு காமெடி ஒவ்வொன்றும் திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரமான விஜய் சேதுபதி தன் குரல் மூலம் மொத்த படத்தையும் முன்னோக்கி எடுத்துச்செல்கிறார். வில்லனான மிஷ்கின் காமெடி கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

    இயக்கம்

    ஒரு வித்தியாசமான கதையை காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் இருந்தாலும் திரைக்கதையை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்து பாராட்டுகளை பெறுகிறார் இயக்குனர்.

    இசை

    பாரத் சங்கர் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கக்கூடியவை. பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.

    ஒளிப்பதிவு

    வித்து அய்யனா ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார்.

    படத்தொகுப்பு

    பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் கலக்கியுள்ளார்.

    காஸ்டியூம்

    தினேஷ் மனோகரன் காஸ்டியூம் டிசைனில் நடிகர்கள் பளிச்சிடுகின்றனர்.

    சவுண்ட் எபெக்ட்

    சுரேன் ஜி சவுண்ட் மிக்ஸிங் படத்திற்கு வலுவாக அமைந்துள்ளது.

    புரொடக்‌ஷன்

    சாந்தி டாக்கீஸ் நிறுவனம்  ‘மாவீரன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-11-28 09:00:37.0
    Mathana

    super

    ×