என் மலர்


மார்கன்
வித்தியாசமாக கொலை செய்யும் கொலையாளியை தேடும் காவலதிகாரியின் கதை
கதைக்களம்
நாயகன் விஜய் ஆண்டனி மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். சென்னையில் ஒருநாள் நள்ளிரவில் இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்கிறார். இந்த கொலை செய்தியை அறிந்த விஜய் ஆண்டனி, மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். மேலும் அந்த கொலை வழக்கை கையில் எடுக்கிறார். விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்காமல் விஜய் ஆண்டனி தவிக்கிறார்.
இறுதியில் விஜய் ஆண்டனி, பெண்ணை கொலை செய்த மர்ம நபரை கண்டுபிடித்தாரா? மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்தார்? விஜய் ஆண்டனி அந்த கேசை கையில் எடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் ஆண்டனி, போலீஸ் அதிகாரியாக வில்லனை தேடி அலையும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். தன் மகள் இறந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் பயணிக்கும் பிரகிடா, போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் அஜய் தேசன், நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மகாநதி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லியோ ஜான் பால். வழக்கமான கிரைம் திரில்லர் என்றாலும் திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் குறைகிறது. கொலையாளி யார் என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்து இருப்பது சிறப்பு. இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
யுவாவின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது.
தயாரிப்பு
விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











