என் மலர்tooltip icon
    < Back
    மாரீசன் திரைவிமர்சனம் | Maareesan Review in tamil
    மாரீசன் திரைவிமர்சனம் | Maareesan Review in tamil

    மாரீசன்

    இயக்குனர்: சுதீஷ் சங்கர்
    எடிட்டர்:ஸ்ரீஜித் சாரங்
    ஒளிப்பதிவாளர்:கலைச்செல்வன் சிவாஜி
    இசை:யுவன் ஷங்கர் ராஜா
    வெளியீட்டு தேதி:2025-07-25
    Points:6605

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை878010377
    Point20553259916375
    கரு

    ஒரு திருடனும் , நியாபக மறதி நோய் உள்ள நபரும் பயணிக்கும் கதையாக அமைந்துள்ளது.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கைதியான ஃபஹத் ஃபாசில் சிறையில் இருந்து விடுதையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டில் வடிவேலு சங்கிளியால் கட்டப்பட்டு இருக்கிறார். வடிவேலுக்கு நியாபக மறதி நோய் இருப்பது ஃபஹத் ஃபாசிலுக்கு தெரிய வருகிறது. தன்னை இங்கு இருந்து விடுவித்தால் உனக்கு பணம் தருகிறேன் என ஃபஹத் ஃபாசிலிடம் வடிவேலு கூறுகிறார். அங்கு இருந்து விடுவித்து ஃபஹத் ஃபாசில் வடிவேலுவை அழைத்து செல்கிறார்.

    இச்சூழ்நிலையில் வடிவேலு வங்கியில் 25 லட்ச ருபாய் பணம் இருக்கிறது தெரிய வருகிறது. இதனை திருட ஃபஹத் திட்டமிடுகிறார். இதனால் அவருடன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அப்பயணத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? அந்த எதிர்பாராத விஷயங்கள் என்ன? ஃபஹத் ஃபாசில் பணத்தை திருடினாரா? வடிவேலுவின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    திருடனாக நடித்து இருக்கும் ஃபஹத் ஃபாசில் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்த குறும்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலு அவரது அனுபவ நடிப்பை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார்.

    கோவை சரளா,விவேக் பிரசன்னா, சிதாரா, தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா,ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர்.

    இயக்கம்

    நியாபக மறதி நோயாளியும் அதனை பயன்படுத்த நினைக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதையை வி.கிருஷ்ண மூர்த்தி எழுதியுள்ளார். அதன் சுவாரசியம் குறையாமல் இயக்கியுள்ளார் சுதீஷ் ஷங்கர். படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் அதனை இரண்டாம் பாதியில் ஈடுக்கட்டியுள்ளார். படத்தின் நேரளவை குறைத்து இருந்தால் திரைப்படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய உதவியுள்ளது.

    இசை

    யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கதையோட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    தயாரிப்பு

    Super Good films தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2025-10-17 15:50:26.0
    Shankar

    2025-08-04 07:19:18.0
    vigneshwari kumar

    Nice

    ×