என் மலர்tooltip icon
    < Back
    மாமரம் திரைவிமர்சனம் | Maamaram Review in tamil
    மாமரம் திரைவிமர்சனம் | Maamaram Review in tamil

    மாமரம்

    இயக்குனர்: ஜெய் ஆகாஷ்
    எடிட்டர்:மணிகண்டன்
    வெளியீட்டு தேதி:2025-08-08
    Points:110

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை554485245
    Point335324
    கரு

    வழக்கமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் ஜெய் ஆகாஷும், நாயகி மீனாட்சியும் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் பிரிந்து விடுகிறார்கள். அதன்பின் காதலையும், காதலர்களையும் வெறுக்கிறார் ஜெய் ஆகாஷ். சில வருடங்களில் மற்றொரு நாயகியான நிஷா, ஜெய் ஆகாஷை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர் காதலை ஜெய் ஆகாஷ் ஏற்க மறுக்கிறார். முதல் காதலியான மீனாட்சியை வெறுக்கும் ஜெய் ஆகாஷுக்கு, மீனாட்சியே ஒரு கட்டத்தில் உதவ நேரிடுகிறது.

    இறுதியில் ஜெய் ஆகாஷுக்கு மீனாட்சி செய்த உதவி என்ன? இருவரும் பிரிய என்ன காரணம்? நிஷாவின் காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜெய் ஆகாஷ், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். நடனம், ஆக்ஷன், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி அழகாக வந்து கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் நிஷா, பிரம்மானந்தம், அருணாசலம், காதல் சுகுமார், ராகுல் தேவ், திவாகர் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நாயகனாக நடித்து இருக்கும் ஜெய் ஆகாஷே இப்படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எடுத்த இப்படத்தை, தற்போது சில காட்சிகளை மட்டும் படமாக்கி இணைத்து கொடுத்து இருக்கிறார் ஜெய் ஆகாஷ். கதைக்கு பொருத்தமாக இருந்தாலும், காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் இல்லாமல் அமைந்து இருப்பது பலவீனம். சில இடங்களில் கதாபாத்திரங்களின் நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது.

    இசை 

    நந்தா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஜெய் ஹரிசாந்த்தின் பின்னணி இசை சில இடங்களில் பொருந்தால் இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பால் பாண்டியின் ஒளிப்பதிவு பெரிதாக கவரவில்லை.

    தயாரிப்பு

    ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2025-08-09 19:44:33.0
    shamila

    ஜெய் ஆகாஷ் sir இயக்கி நடித்துள்ள சிறந்த திரைப்படம் மாமரம். பெயரைப் போலவே கனிகள் பல தரும் சிறந்த மரம். இந்த திரைப்படத்தில் வயது வித்தியாசத்தையும் தோற்றத்தையும் காட்டும் விதமாக தானே 10 வருடங்கள் ஒரே ஹீரோவாய் நடித்துள்ளார். இது அவரது சொந்த காதல் கதையை தழுவி எடுக்கப்பட்ட உண்மையான கதை. ஜெய் sir தனது சிறந்த உணர்வுபூர்வமான நடிப்பில் எல்லோரையும் கவருகிறார். பாடல்கள் வரிகள் மிகவும் அழகாய் உள்ளது. எல்லோருமே கண்டு களிக்க வேண்டிய அட்புதமான திரைப்படம்.

    2025-08-09 19:04:30.0
    Mass Maharaja

    Excellent emotional love story from the hero and director Jai Akash. His acting, dance and fight are superb. All the songs are very good. Cinematography in most of the scenes are very good except for few scenes. The comedy is good by Kadhal Suhumar, Brammanandam and Diwakar in each stage of the hero's life. Two heroines Nisha and Meenakshi are good. The other heroine Kietky Wallace is ok. Villains Rahul Dev and Brammaji are good and the MLA character is ok. Jaiakash has done an excellent job as a director and hero. Overall, this Maamaram movie touched my heart ❤️

    ×