search icon
என் மலர்tooltip icon
    < Back
    LGM
    LGM

    எல்.ஜி.எம்

    இயக்குனர்: ரமேஷ் தமிழ்மணி
    எடிட்டர்:பிரதீப் ஏ ராகவா
    ஒளிப்பதிவாளர்:விஸ்வஜித் ஒடுக்கத்தில்
    இசை:ரமேஷ் தமிழ்மணி
    வெளியீட்டு தேதி:2023-07-28
    Points:1331

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை757560
    Point523637171
    கரு

    மாமியாரை புரிந்துக்கொள்ள நினைக்கும் மருமகளால் ஏற்படும் பிரச்சினை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    தாய் நதியாவுடன் வாழ்ந்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாணும் நாயகி இவானாவும் இரண்டு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

    திருமண சம்பந்தம் பேசபோன இடத்தில், ஒரு பிரச்சினை வெடிக்கிறது. அதாவது, கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது.

    ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் மாமியார் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் போலாம் என்று இவானா கேட்கிறார். ஹரிஷ் கல்யாணும் தாய் நதியாவை ஏமாற்றி அழைத்து செல்கிறார்.

    இறுதியில் இந்த ட்ரிப் என்ன ஆனது? மாமியார் நதியாவுடன் மருமகள் இவானா ஒன்று சேர்ந்தாரா? ஹரிஷ் கல்யாண், இவானா திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகன் ஹரிஷ் கல்யாண் யதார்த்தமாக நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். முதல் பாதியில் காதலியா... தாயா... என்று வரும் காட்சியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகி இவானா துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். முகபாவனைகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். ஒரு ஐடியா சொல்லவா... என்று சொல்லும் போது ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள்.

    தாயாக வரும் நதியா, முதல் பாதியில் வயதான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் காட்சியளிக்கிறார். ஒரு தாயின் உணர்வை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக நடனத்தில் அசத்தி இருக்கிறார். யோகிபாபுவின் காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மிர்ச்சி விஜய் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.

    இயக்கம்

    திருமண வயதில் இருக்கும் பெண்கள் பயப்படும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. முதல் பாதி ரசிக்க வைத்திருந்தாலும், இரண்டாம் பாதி சற்று ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதை படத்தை விட்டு விலகி செல்வதுபோல் இருக்கிறது.

    இசை

    ரமேஷ் தமிழ்மணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    விஸ்வாஜித்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

    படத்தொகுப்பு

    பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு கவர்ந்துள்ளது.

    காஸ்டியூம்

    பூர்ணிமா காஸ்டியூம் டிசைனில் அசத்தியுள்ளார்.

    சவுண்ட் எபெக்ட்

    லாரன்ஸ் விஷ்ணு மற்றும் விசாக் சவுண்ட் மிக்ஸிங் சூப்பர்.

    புரொடக்‌ஷன்

    டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘எல்.ஜி.எம்’ படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-11-28 08:48:33.0
    Mathana

    nice

    ×