என் மலர்tooltip icon
    < Back
    கீனோ திரைவிமர்சனம்  | Keeno Review in Tamil
    கீனோ திரைவிமர்சனம்  | Keeno Review in Tamil

    கீனோ

    இயக்குனர்: R.K.திவாகர்
    எடிட்டர்:கிருத்திகா காந்தி
    ஒளிப்பதிவாளர்:ஆலிவர் டெனி
    வெளியீட்டு தேதி:2025-05-09
    Points:7

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை816643
    Point34
    கரு

    புதுமையான திகில் உணர்வுடன் அறிவியல் கலந்து திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    விமர்சனம்

    கதைக்களம்

    கார் ஷோரூமில் மார்க்கெட்டிங் ஊழியராக பணியாற்றி வருகிறார் மகாதாரா பகவத். இவர் மனைவி ரேணு சதீஷ், மகன் காந்தர்வாவுடன் வசித்து வருகிறார். மனைவி ரேணு வேலை விஷயமாக வெளிநாடு செல்ல, மகனுடன் மகாதாராபகவத் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சிறுவன் காந்தர்வா தனியாக இருக்கும் போது ‘கீனோ’ என்ற மர்ம உருவம் அவனை பயமுறுத்துகிறது. இதனால் காந்தர்வா பாதிக்கப்படுகிறான்.

    இறுதியில் மர்ம உருவம் யார்? அதன் பின்னணி என்ன? கீனோவின் தாக்கத்தில் இருந்து சிறுவன் மீண்டானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கீனோ கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் காட்சியில் சிறுவன் காந்தர்வா நடிப்பு பாராட்ட வைக்கிறது. பாதிப்பில் இருந்து மகனை மீட்பதற்காக போராடும் காட்சிகளில் மகாதாராபகவத், ரேணுசதீஷ் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    திகில் படத்தில் இதுவரை பார்த்திராத கீனோ என்ற கதாபாத்திரத்தில் புதுமையான திகில் உணர்வுடன் அறிவியல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஆர்.கே.திவாகர். திரைக்கதைக்கு இன்னும் கூடுதல் அழுத்தம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தீய சக்தி என்ற மிரட்டலுக்கும், பயத்துக்கும் அறிவியலோடு படத்தில் விடை சொல்லி இருப்பது ரசிக்க வைக்கிறது.

    இசை

    ஆர்.கே.திவாகரின் இசை, கதைக்கு கூடுதல் பலமாக அமைந்து உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    தயாரிப்பு

    Ghantharvaa Celluloid Creators நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×