என் மலர்


கராத்தே கிட: லெஜெண்ட்ஸ்
கராத்தே கிட் படத்தின் பிரான்சிஸில் அடுத்த பாகமாக உருவாகி இருக்கிறது.
கதைக்களம்
கராத்தே கிட்-இன் இந்த பாகம் இதன் முதல் பாகத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. லீ என்ற டீன் ஏஜ் பையன் ஜாக்கி
சானிடம் குங்பூ கற்றுக் கொள்கிறார் ஆனால் இது லீயின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பின் லீயின் அம்மாவிற்கு நியூ யார்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அதனால் அவர்கள் பெய்ஜின் நகரத்தில் இருந்து நீயூ யார்க் செல்கின்றனர். அங்கு ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் லீ. அங்கு ஒரு பெண்ணிடம் நட்பு ஏற்பட்டு அதன் பிறகு அது காதலாக மாறுகிறது. பெண்ணின் தந்தை ஒரு காலக்கட்டத்தில் பாக்சிங் சாம்பியனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீ சண்டை திறனை பார்த்து, பெண்ணின் தந்தை தனக்கும் குங் பூ கற்றுக் கொடுக்க சொல்கிறார். பின் லீ அவருக்கு கற்றுக் கொடுக்க அவரும் நன்றாக டிரெயின் ஆகிறார். அதற்கு பிறகு அவர் மீண்டும் பாக்சிங்கில் இறங்க அங்கு அவருக்கு பலமான அடிப்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார்.
தற்பொழுது காதலியின் தந்தை வாங்கிய கடனை அடைக்க லீ சண்டையிட்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பிறகு ஜாக்கிஜான் மற்றும் ரால்பே உதவியுடன் பயிற்சியை தொடர்கிறார் லீ.இதற்கு அடுத்து என்ன ஆனது ? பாக்சிங் போட்டியில் லீ வென்றாரா? காதலியின் தந்தைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக பென் வாங், லீ என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், ஜாக்கி சான், ரால்பே எல்லாம் எதோ கெஸ்ட் ரோல் போல் தான் வந்து செல்கின்றனர். ஜாக்கி சான் மற்றும் ரால்பே லீ-க்கு பயிற்சி கொடுக்கும் காட்சிகளில் சிறப்பாக அமைந்துள்ளது.
இயக்கம்
முதல் பாகத்தின் ஒரு பகுதி கதையை எடுத்து இப்பாகத்தில் இணைந்து அதன் வழி கதைக்களத்தை அமைத்தது சிறப்பு. கடந்த பாகத்தில் ஜேடன் ஸ்மித் காட்சிகள், அவன் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம் பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆனால் இந்த பாகத்தில் அந்த எமோஷனல் காட்சிகள் மிஸ் ஆகிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் வொர்க் அவுட் ஆகாதது மைனஸ்.
ஒளிப்பதிவு
ஜஸ்டின் ப்ரவுனின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
இசை
டொமினிக் லுவிஸ் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
கொலோம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









