என் மலர்


கா.மு - கா.பி
கல்யாணத்திற்கு பிறகு எப்படி மனைவியை காதலிக்க வேண்டும் என சொல்லும் கதை
கதைக்களம்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் கதாநாயகன் விக்னேஷ் ரவி. இவர் கதாநாயகியான சரண்யா ரவிச்சந்திரனை காதலில்கிறார். அவரை திருமணம் செய்யும் போது 2 வருடம் கால அவகாசம் கொடு அதற்குள் நான் சினிமாவில் ஆளாகிவிடுவேன் என விக்னேஷ் கூறுகிறார். ஆனால் காலங்கள் உருண்டு ஓடுகிறது மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் ஒரு பொண்டாட்டி தாசனாக இருக்கிறார் விக்னேஷ்.
தம்பதி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்...!, என்று பாராட்டும்படி இல்லற வாழ்க்கையை தொடங்கும் இவர்கள், நாளடைவில் சிறு சிறு விசயங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள் மிக சாதாரணமானவை என்றாலும், அவர்களுடைய சூழல் அதை பெரிதாக்கி விட, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களை நிரந்தரமாக பிரித்ததா? அல்லது அவர்கள் மீண்டும் தங்களை புரிந்து கொண்டு ஒன்றிணைய வழிவகுத்ததா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ’க.மு - க.பி’.
நடிகர்கள்
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன், இப்படத்தின் மூலம் கதையின் நாயகன், நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்கள். இருவரும் தங்களது நடிப்பு மூலம் முழு படத்தையும் சுமந்திருக்கிறார்கள்.
காதல் காட்சிகளில் சில இடங்களில் இவர்களது திரை இருப்பு செயற்கைத்தனமாக தெரிந்தாலும், கணவன், மனைவியாக சண்டைப்போட்டுக் கொள்ளும் காட்சிகளில் எதார்த்தமாக பயணித்து பார்வையாளர்களின் மனதில் பதிகின்றனர்.
டி.எஸ்.கே, பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், கேப்டன் ஆனந்த் என சிறு சிறு வேடங்களில் முகம் காட்டுபவர்கள் கூட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்து போகிறார்கள்.
இயக்கம்
காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் பலர் திருமணத்துக்குப் பிறகு அதே அளவு காதலோடு வாழாமல் விவாகரத்தில் வந்து நிற்பது ஏன்? என்ற கேள்வியை கதைக்களமாக்கி, அதற்கான தீர்வை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் புஷ்பநாத் ஆறுமுகம்.
நான் லீனியர் முறையில் சொல்லப்படும் காதல் கதை. அதில் ஒன்று நிஜம், ஒன்று கற்பனை என இரண்டு விதத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது . ஆனால் அதை எதையுமே ஒழுங்காக கூறவில்லை. படத்தின் திரைக்கதை படும் மோசம். என்ன சொல்ல வருகிறார்கள் என பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்துகிறது. காட்சியமைப்பில் ஒரு கோர்வை இல்லை
இசை
இசையமைப்பாளர் தர்ஷன் ரவி குமாரின் இசை கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜி.எம்.சுந்தர், கதைக்களத்திற்கு ஏற்ப இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.










