search icon
என் மலர்tooltip icon
    < Back
    Kalvan
    Kalvan

    கள்வன்

    இயக்குனர்: பி.வி. ஷங்கர்
    ஒளிப்பதிவாளர்:பி.வி. ஷங்கர்
    இசை:ஜிவி பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:2024-04-04
    Points:4595

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை3038463445
    Point1882193347728815
    கரு

    எந்த நோக்கமும் இல்லாத ஒருவனின் வாழ்க்கையில் ஒரு பெண் மற்றும் வயதான நபர் நுழைகிறார்கள். அதன் பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறியது என்பதே கதையின் சுருக்கம்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவர் தனது நண்பர் தீனாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகள் செய்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறார்கள். Forest Officer ஆக வேண்டும் என்பது விருப்பம்.

    ஜி.வி.பிரகாஷும் தீனாவும் மற்றொரு ஊருக்கு சென்று திருடும் நேரத்தில் நாயகி இவானா அவர்களை போலீசில் சிக்க வைத்து விடுகிறார். இதிலிருந்து இவானா மீது காதல் வயப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

    நர்சிங் கோர்ஸ் படிக்கும் இவானா, ஜி.வி.பிரகாஷ் திருட்டு தொழில் செய்வதால் அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் இவானா முதியோர் இல்லத்தில் அன்பாக பழகி வரும் பாரதிராஜாவை ஜி.வி.பிரகாஷ் தத்தெடுக்கிறார். மேலும் பாரதிராஜாவை வைத்து ஒரு திட்டத்தையும் போடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ், இவானாவை காதலிக்க வைத்தாரா? பாரதிராஜாவை வைத்து போட்ட திட்டம் என்ன? Forest Officer வேலைக்கு ஜி.வி.பிரகாஷ் சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் துறு துறு இளைஞனாக நடித்து இருக்கிறார். முதல் பாதியில் திருட்டு, காதல் என்றும் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட், எமோஷனல் என்றும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி இவானா துணிச்சலான பெண்ணாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார். குறிப்பாக ஜி.வி.பிரகாஷை அடிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    தனக்கே உரிய பாணியில் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் பாரதிராஜா. மௌனம், காமெடி, ஜி.வி.பிரகாஷுக்காக வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். தீனாவின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

     திரைக்கதை மற்றும் இயக்கம் நன்றாக அமையாதது வருத்தம். யானையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வி.சங்கர். ஆனால், யானைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இயக்கி இருக்கிறார். திரைக்கதை வலுவில்லாமல், காட்சிகள் அழுத்தம் இல்லாமலும் நகர்கிறது. அதுபோல் காமெடியும் பெரியதாக எடுபடவில்லை.

    ஒளிப்பதிவு

    பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தெளிவாக உள்ளது.

    இசை

    நடிப்பில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் கொஞ்சம் இசையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசை ஓகே.

    தயாரிப்பு

    ஜி. டில்லி பாபு கள்வன் படத்தை தயாரித்துள்ளார்

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×