என் மலர்


ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்
கொடிய நோய் தொற்றிற்கு டைனோசரில் இருந்து மருந்து கண்டுபிடிக்கும் குழுவின் கதை
கதைக்களம்
டைனோசர்களை வைத்து ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகின்றது. அங்கு நடக்கும் ஒரு பெரிய விபத்தால் அந்த ஆராய்ச்சி கூடம் அளிந்து விடுகிறது. இதனால் டைனோசர்கள் வாழ்வதற்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் அந்த ஆராய்ச்சியை கைவிட்டு விட்டு திரும்புகின்றனர். பல வருடங்கள் கழித்து ஊரில் ஒரு புதிய நோய் தொற்று உருவாகிறது இதன் பாதிப்பால் 5-ல் ஒருவர் இறக்கிறார்கள்.
இந்த நோயை குணப்படுத்தும் மருந்து மறைந்து வாழும் டைனோசர்களிடன் உள்ளது என அறிந்து அதை எடுக்க மீண்டும் ஒரு குழு புறப்படுகிறது. அந்த தீவுக்கு சென்ற பிறகு டைனோசர்களால் இவர்கள் தாக்கப்படுகிறார்கள். அந்த தீவில் ஆராய்ச்சி குழு மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது இதற்கு அடுத்து என்ன ஆனது? டைனோசர்களிடம் இருந்து அந்த மருந்தை எப்படி எடுத்தார்கள்? தீவை விட்டு ஆராய்ச்சி நபர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனான ஜானதன் பெய்லி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக நடித்து இருக்கும் ஸ்கார்லட் ஜொஹான்சன் பார்வையாளர்களை தன் நடிப்பின் மூலம் கவர்கிறார்.
மற்ற நடிகர்களான ருபெர்ட், மஹர்ஷாலா அலி, டேவிட், மானுவல் என அனைவரும் கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
இயக்கம்
ஹாலிவுட் படத்திற்கே உரிய டெம்பிலேட்டில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் காரெத் எட்வர்ட்ஸ். படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக செல்கிறது அது இரண்டாம் பாதியில் இல்லாதது வருத்தம். இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். VFX காட்சிகள் பெரிதாக எடுப்படவில்லை.
ஒளிப்பதிவு
ஜான் மேத்தீசன்- இன் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது. டைனோசர் துரத்தும் காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளார்.
இசை
அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட் பின்னணி இசை திரைக்கதை பயணத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
தயாரிப்பு
Amblin Entertainment தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.









