என் மலர்


ஜோரா கைய தட்டுங்க
மேஜிக் கலையை மையமாக வைத்து அதில் பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது
கதைக்களம்
நாயகன் யோகி பாபு பிரபல மேஜிக் கலைஞரின் மகன். இவரது தந்தை இறப்புக்குப் பிறகு இவர் மேஜிக் கலைஞராகி விடுகிறார். இவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கும் யோகி பாபு, ஒரு ரவுடி கும்பல் மூலமாக தனது கையை இழக்கிறார். மேலும், அந்த ரவுடி கும்பல் ஒரு குழந்தையை கொலை செய்கிறது.
இதனால் கோபம் அடையும் யோகி பாபு, அந்த ரவுடி கும்பலை, தன் மேஜிக் கலை மூலம் பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் அந்த ரவுடி கும்பலை யோகி பாபு பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். முழுக்கதையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவ் அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
மேஜிக் கலையை மையமாக வைத்து அதில் பழிவாங்கும் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வினீஷ் மில்லினியம். காமெடியாகவும், பழிவாங்குவதையும் திரைக்கதையாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. மேஜிக் மூலம் தப்பிப்பது என ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் யோகி பாபுவின் காமெடி வீணடிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஒளிப்பதிவு
மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இசை
இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
WAMA என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









