என் மலர்


இரவு பறவை
குடியுரிமை இல்லாத மக்களின் வலியை சொல்லும் திரைப்படம்.
கதைக்களம்
கதாநாயகியான நந்தினி இலங்கை அகதியாக தமிழ் நாட்டில் குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். கிடைத்த வேலையை செய்துக் கொண்டு இருக்கிறார். இரவு நேரங்களில் நாடகங்களில் நடனமாடுகிறார்.
அப்பொழுது ஊருக்குல் ஒரு புதுவிதமான நோய் பரவுகிறது. அந்த நோயால் ஆண்கள் அவர்களுடைய ஆண்மை தன்மையை இழக்கின்றனர். இந்த பரவும் நோய்க்கும் கதாநாயகி நந்தினிக்கும் தொடர்ப்பு இருக்கிறது என தெரிய வருகிறது? இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. நந்தினிக்கும் இதற்க்கும் என்ன தொடர்பு? எதற்காக அவர் இப்படி செய்கிறார்?
நடிகர்கள்
கதாநாயகியான நந்தினி ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்துள்ளார். காவல் அதிகாரியாக வரும் ஜெய் நடிப்பு சொதப்பல்.
நகைச்சுவை நடிகரான போண்டாமணி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நிழல்கள் ரவி கொடுத்த வேலையை செய்துள்ளார்.
இயக்கம்
ஒரு இலங்கை அகதியின் கதையை மையமாக வைத்துக் கொண்டு ஆனால் அதற்கேற்ற காட்சியமைப்பு ஒன்றும் இல்லை. எதற்காக இப்படி ஒரு திரைப்படம் இயக்குநர் வேதாஜி பாண்டியன் எடுத்தார் என தெரியவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
பகவதி ராஜாவின் ஒளிப்பதிவில் தெளிவில்லை.
இசை
கோபாலின் இசை சுமார் ரகம்.
தயாரிப்பு
V.THAAVEEDHURAJA இப்படத்தை தயாரித்துள்ளார்.









